இஞ்சியில் நிறைய மருத்துவ பயன்கள் உள்ளன, புற்றுநோய் செல்களை அழிக்கும் தன்மை கொண்டது, இஞ்சியை கொண்டு ஜூஸ் தயாரித்து வெறும் வயிற்றில் 7 நாட்கள் குடித்தால் பல்வேறு நன்மைகளை பெறலாம்.இந்த ஜூஸை எப்படி தயார் செய்வது இதை யார் எல்லாம் குடிக்கலாம் என்பது குறித்து பார்ப்போம்.
இஞ்சி ஜூஸ் தயாரிப்பது எப்படி?
இஞ்சியை எப்பொழுதும் தோல் நீக்கியே பயன்படுத்த வேண்டும்.ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் தண்ணீர் ஊற்றி தண்ணீர் சூடானதும் ஒரு சிறியதுண்டு இஞ்சி மற்றும் 2 ஏலக்காயை இடித்து சூடான தண்ணீரில் சேர்க்கவும்.இதை நன்றாக கொதிக்கவிட்டு வடிகட்டி எடுத்துக்கொள்ளுங்கள. இதனுடன் அரை மூடி எலுமிச்சை சாறு சேர்த்து சர்க்கரை நோய் இல்லாதவர்களாக இருந்தால் 1 தேக்கரண்டி தேன் கலந்து குடிக்கவும்.
நன்மைகள்
இரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைக்கிறது.பசியை தூண்டும்.
செரிமான பிரச்சனையை நீக்கும்.இரைப்பை,குடல் புற்றுநோய் வராமல் தடுக்கும்.குமட்டல்,வாந்தி வராமல் தடுக்கும்.நுரையீரலில் தேங்கி கிடக்கும் சளியை வெளியேற்றும்.ஆஸ்துமா நோயாளிகளுக்கு இது ஒரு சிறந்த பானம்தொண்டை புண்ணை சரி செய்யும்
இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத்தும்உடலின் கொழுப்பை கரைக்கும் , வாய் துர்நாற்றத்தை போக்கும் , யார் எல்லாம் இந்த ஜூஸை குடிக்கக்கூடாது , பித்தப்பையில் கல் இருப்பவர்கள் , அல்சர் பிரச்சனை உள்ளவர்கள் , ஏதோ ஒரு நோய்க்காக அறுவை சிகிச்சை செய்ய உள்ளவர்கள் , ஏனென்றால் இஞ்சி அதிக இரத்த போக்கை ஏற்படுத்தும்.ஆகவே மேற்கூறியவர்கள் இந்த பானத்தை பருகக்கூடாது.