ஞாபகத் திறனை அதிகரிக்கும் ’வல்லாரைக் கீரை கூட்டு’ - சமைப்பது எப்படி..?

28 Views
Editor: 0

வல்லாரைக் கீரை கண் பார்வையை கூர்மையாக்கவும், ஞாபகத் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை வாரம் ஒருமுறையேனும் செய்து சாப்பிட்டால் நல்லது. எப்படி செய்வது என்று பார்க்கலாம்..

வல்லாரைக் கீரை கண் பார்வையை கூர்மையாக்கவும், ஞாபகத் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை வாரம் ஒருமுறையேனும் செய்து சாப்பிட்டால் நல்லது. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள் :

வல்லாரைக் கீரை - 2 கப்

சிறு பருப்பு - 1/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1உப்பு - தே.அ

அரைக்க

துருவிய தேங்காய் - 1/4 கப்
சீரகம் - 1 tsp
காய்ந்த மிளகாய் - 2
பொட்டுக்கடலை - 1 tsp

தாளிக்க :

எண்ணெய் - 2 tsp
கடுகு - 1 tsp
உளுத்தம் பருப்பு - 1 tsp
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சின்ன வெங்காயம் - 4


செய்முறை :

முதலில் அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் மைய அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

குக்கரில் கீரை, சிறு பருப்பு, வெங்காயம் , தக்காளி மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள். 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.

பிரஷர் இறங்கியதும் குக்கரை திறந்து அரைத்த தேங்காய் பேஸ்டை சேர்த்துக் கலந்துவிடுங்கள். போதுமான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்குக் கொதிக்க வையுங்கள்.

கொதித்ததும் தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி கீரையில் சேருங்கள். சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளுங்கள்.

அடுத்து நன்கு கிளறி மற்றொரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறுங்கள். வல்லாரைக் கீரை கூட்டு தயார்.

ஆரோக்கிய சமையல்