dates : முந்திரி பருப்புடன் சிறிது பேரிச்சம் பழம் சேர்த்து நீரில் கொதிக்க வைத்து கஷாயம் செய்து உண்டால் நம் உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். பாலுடன் பேரிச்சம் பழத்தின் விதையை நீக்கி சேர்த்து வேகவைத்து அருந்தி வந்தால் இதய நோய்கள் குணமாகும். ஜலதோஷம் இருமல் குணமாகும்.
பேரீச்சம் பழத்தை தேனில் ஊறவைத்து காலை, மாலை என இருவேளையும் கொடுத்து வந்தால் குழந்தையின் உடல் தேறி வலுவுடனும் புத்துணர்ச்சியுடனும் சுறுசுறுப்பாகவும் காணப்படுவார்கள்.
பெண்களுக்கு கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிகம் தேவைபடுவதலும், மாதவிலக்குக் காலங்களில் ஏற்படும் பலகீனத்தை ஈடுகட்டவும் மாத விலக்கை ஒழுங்கு படுத்தவும் பேரீச்சம் பழம் மருந்தாகிறது.
சர்க்கரை நோய் உடையவருக்கு எலும்புகள் பலம் குறைந்து வரும் அப்பொழது தினமும் ஒன்று அல்லது இரண்டு பழம் வீதம் சாப்பிட்டு வந்தால் உடலுக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்கும்.