அன்னாசி பழம் சாப்பிட முதலில் அதன் தோலை நீக்கிவிடுவோம். ஆனால் தேவையற்றது என தூக்கி எரியும் அதன் தோலில்தான் பழத்தைக் காட்டிலும் பல நன்மைகள் உள்ளன என்கின்றனர். இதை ஆய்வு மூலமாகவும் நிரூபித்துள்ளனர்.
அன்னாசி பழத்தோலில் வைட்டமின் B, மெக்னீசியம், பொட்டாசியம், துத்தநாகம், மாங்கனீசு, கால்சியம் மற்றும் இரும்பு ஆகியவை உள்ளன. இது பாக்டீரியாக்களை எதிர்த்துப் போராடும் பண்புகளைக் கொண்டுள்ளது.
அன்னாசி தோல் செரிமானத்திற்கு நல்லது.அதில் நார்ச்சத்து நிறைந்தது. அன்னாசி தோலில் ப்ரோமலின் என்ற நொதி காணப்படுகிறது. இது உடலில் இரத்தம் உருவாக்கத்தை அதிகரிக்க உதவுகிறது. அதோடு செரிமானத்தை மேம்படுத்துகிறது.
அன்னாசி தோலில் காணப்படும் ப்ரோமலின், உடலில் எரியும் உணர்வை நீக்கும் சக்திவாய்ந்த என்சைம் ஆகும். அறுவை சிகிச்சை அல்லது ஏதேனும் காயம் ஏற்பட்டால், அன்னாசி தோலை உட்கொள்வது விரைவான நிவாரணத்தை அளிக்கும்.
அன்னாசி பொதுவாகவே வைட்டமின் சி நிறைந்தது. ஆனால் அது பழத்தைக் காட்டிலும் தோலில்தான் அதிகம் உள்ளது. இந்த வைட்டமின் சி ஆனது, உடலை பாக்டீரியாவிலிருந்து பாதுகாக்கிறது. இருமல் மற்றும் காய்ச்சல் இல்லாமல் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை பலப்படுத்துகிறது.
கீல்வாதம் அல்லது மூட்டு வலி உள்ளவர்கள் அன்னாசிப்பழத் தோலை உட்கொள்ளலாம்.
அன்னாசிப்பழத் தோல் பற்கள் மற்றும் எலும்புகளை பலப்படுத்துகிறது. இவற்றில் காணப்படும் மாங்கனீசு ஈறுகளையும் திசுக்களையும் வீக்கத்திலிருந்து பாதுகாக்கிறது.
அன்னாசிப்பழத்தில் பீட்டா கரோட்டின் மற்றும் வைட்டமின் சி இருப்பதால் கண்பார்வையை கூர்மைப்படுத்த உதவுகிறது.
எனவே இதை நேரடியாக சாப்பிட முடியாவிட்டாலும் ஜூஸ் போட்டோ அல்லது காய வைத்து பொடியாக்கியோ, பைனாப்பில் பீல் வினிகர் தயாரித்தோ சாப்பிடலாம். இதன் பவுடர் ஆன்லைனிலும் கிடைக்கின்றன.