நுரையீரல் புற்றுநோயை எதிர்த்துப் போராடும் உணவுகள் என்னென்ன?
பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் நுரையீரல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அது அதிகமான நிலையில் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். புற்றுநோய்களிலேயே நுரையீரல் புற்றுநோய் தான் அதிகம்பேரை தாக்கும் கொடிய நோயாக உருவெடுத்திருக்கிறது. இது வயது பாரபட்சமின்றி சில வாழ்க்கை பழக்க வழக்கங்களால் எல்லா வயதினருக்கும் வருகிறது.
நுரையீரல் புற்றுநோய் மூன்று தீவிர நிலைகளைக் கொண்டுள்ளது. மூன்றாம் நிலையைத் தாண்டி சிகிச்சை அளிக்கப்பட்டது. பொதுவுாக நுரையீரல் புற்றுநோய் என்பது தீவிரமாக நுரையீரலைத் தாக்கி சுவாசக்கோளாறு ஏற்படுத்துகிறது என்று கூறுகின்றனர். எனவே நம் உடல் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள வேண்டியது நம் அனைவருடைய கடமையாக இருக்கிறது. அது எப்படி என்பதை இந்த கட்டுரையில் காணலாம்.
நுரையீரல் புற்றுநோய்:
இந்த வைரஸ் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் தாக்குகிறது. முக்கியமாக நுரையீரலை தாக்கி மூச்சுத்திணறல் ஏற்படுகிறது என்று பலரும் கூறுகின்றனர். உயிரிழந்த பலரும் மூச்சுத்திணறல் காரணமாக இறந்துள்ளதாக உலகம் முழுவதும் உள்ள பல்வேறு ஆய்வுகளில் தெரிய வருகிறது. எனவே நாம் நம் நுரையீரலை ஆரோக்கியமாக வைத்திருக்க வேண்டியது மிகவும் முக்கியமான கடமை ஆயிற்று.
உடலிலுள்ள மற்ற பாகங்கள் சிறிதளவு ஓய்வு எடுத்தாலும் நுரையீரல் என்றுமே ஒய்வு எடுத்ததில்லை அது 24 மணி நேரமும் வேலை செய்து கொண்டே இருக்க வேண்டிய சூழல் நுரையீரலுக்கு உள்ளது. நுரையீரலை பலரும் புகைபிடித்தல் போன்ற தீய பழக்கங்கள் மூலம் கெடுதல் செய்து வந்துள்ளனர். எனவே நம் உடலில் அதிகம் பாதிக்கப்படுவது நுரையீரல் ஆக உள்ளது. நம்மை சுற்றியுள்ள காற்று நுரையீரலைத் தான் பாதிக்கிறது. அந்த நுரையீரலை பாதுகாக்கும் ஆரோக்கியமாகவும் வைத்துக் கொள்ள சில வழி முறைகளை பற்றி பார்க்கலாம்.
மூச்சு விடுதல்
ஆழமாக மூச்சு விடுதல் என்பது ஒரு வகை யோகமாகும் இது பல விதங்களில் நம் முறையில் மட்டுமல்லாமல் நம் உடலின் அனைத்து பகுதியிலும் பிரயோஜனமாக அமைகிறது..மேலும் இது மிகவும் சுலபமான வழி முறைகளில் ஒன்றாகும் மூச்சு பயிற்சி என்பது மிகவும் அத்தியாவசியமான பயிற்சியாகவும் நம் நுரையீரல் ஆரோக்கியமாக வளர்வதற்கு மூச்சுப்பயிற்சி ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது.
உடற்பயிற்சி
மூச்சுப்பயிற்சி போன்றே உடற்பயிற்சியும் நம் நுரையீரலுக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியதாக அமைகிறது. நம் மூச்சுக் காற்றை சுவாசிக்கும் முறை போன்றவற்றை சீராக்கும் அனைத்து உடற்பயிற்சிகளும் நுரையீரலுக்கு நன்மை விளைவிக்கின்றது. நீச்சலடிப்பது நடைப்பயிற்சி ஓட்டப்பயிற்சி மலையேறுதல் போன்ற அனைத்து விதமான பயிற்சிகளும் நம் நுரையீரலுக்கு மிகுந்த நன்மை அளிக்கக் கூடியதாக அமைகிறது.
தண்ணீர்
தண்ணீர் உடலில் உள்ள பல விதமான பிரச்சனைகளையும் நீக்குகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். தினமும் குறைந்தது 2 லிட்டர் முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடித்து வரலாம். தண்ணீர் குடித்து வருவது பலவிதமான தீங்கிலிருந்து நம்மை காக்கும். அதேபோல் அதிகமான தண்ணீர் குடிப்பது ரத்த ஓட்டத்தை சீர் செய்யும். மேலும் நுரையீரலை தனித்தன்மையுடன் வைத்து பாதுகாப்பாக வைத்திருக்கும். எனவே தினமும் 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் கொடுத்து வருவது நுரையீரலுக்கு நன்மை விளைவிக்கும்.
பூண்டு
பூண்டு மற்றும் வெங்காயம் கொலஸ்ட்ரால் அளவை குறைத்து உடலுக்கு இன்பெக்சன் போன்ற கிருமிகளிடமிருந்து போராடி நம்மை பாதுகாப்பு தருகிறது. இந்த பூண்டு மற்றும் வெங்காயம் உடலில் மட்டுமல்லாமல் நுரையீரல்களில் உள்ள கிருமி தொற்று நோயும் அளித்து அதற்கு எதிராக போராடி நம் நுரையீரலை பாதுகாக்க வைத்துக்கொள்ள உதவுகிறது. பூண்டு, ஈரலில் பொதுவாகவே அளிக்கக்கூடிய சக்திகள் ஏராளம் உள்ளது. இது நமது கொலஸ்ட்ரால் அளவையும் குறைத்து விடும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை.
மக்னீசியம்
நட்ஸ் மற்றும் விதைகளில் அதிகமான மெக்னீசியம் இருக்கிறது. இந்த மெக்னீசியம் நம் உடலுக்குள் பல விதங்களில் நன்மையை செய்கிறது. இதே மெக்னீசியம் நமது ஈரலையும் ஆரோக்கியமாகவும் பாதுகாப்புடனும் வைத்திருக்கிறது. மக்னீசியம் நம்முடைய உடலுக்கு மிகவும் அத்தியாவசிய தேவைகளில் ஒன்று. ஆனால் பலரும் கண்டுகொள்ளாமல் விடப்படும் ஊட்டச்சத்துக்களில் ஒன்றும் கூட மக்னீசியம். இதை கட்டாயம் நம்முடைய உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.