இது போதும் 80 வயதிலும் 20 வயது சுறுசுறுப்பு, சர்க்கரை நோய்,மூட்டு வலி,புற்று நோய் வராது...
வேர்க்கடலையை வறுத்தோ, வேக வைத்தோ சாப்பிடுவதால் அதன் சத்தும் அதிகமாகும். இதனால் இரண்டு முதல் நான்கு பங்கு உயிர்ச்சத்து அதிகமாகக் கிடைக்கிறது.
வேர்க்கடலையில் பி.காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் எனப்படும் ரிபோப்ஃபிளேவின், நியாசின், தயாமின், பேண்டோதெனிக் ஆசிட், விட்டமின் பி6 மற்றும் போலேட் ஆகியன அடங்கியுள்ளன. இவை மூளையின் ஆரோக்கியத்துக்கும் மூளைக்கு ரத்த ஓட்டம் சீராகச் செல்லவும் உதவுகின்றன.
வேர்க்கடலை எண்ணை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து பாலில் கரைத்து அன்றாடம் அருந்திவர சிறுநீர்ப்பை அழலையை போக்கி சிறுநீரை சிரமமின்றி கழிக்க உதவுவதோடு சிறு நீர்த்தாரை எரிச்சலையும் போக்கும்.மேலும் மலச்சிக்கலை உடைத்து மிகத் தாராளமாக மலத்தை சுத்திகரிக்கச் செய்யும்.
வேர்க்கடலையை வேக வைத்தாகிலும் வாணலியில் இட்டு வறுத்தாகிலும் வெல்லம் சேர்த்து சாப்பிடுவதால் உடலை வளர்க்கும் உரமாக விளங்கும்.

எடை குறைய வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு புரதம் மற்றும் நார்ச்சத்து அதிகம் உள்ள உணவு அதிகம் தேவைப்படும். புரதம் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவிக்கும், வயிறு நிரம்பிய உணர்வைத் தரும். நார்ச்சத்து உணவை விரைந்து ஜீரணித்து செரிமானத்தை மேம்படுத்துகிறது. இதனால், நீண்ட நேரம் வயிறு நிரம்பிய உணர்வு, மற்றும் சாப்பிட்ட திருப்தி கிடைக்கிறது. இதனால் உங்கள் உணவுத் தேடல் குறைந்து, குறைவான உணவு உட்கொள்ளல் சாத்தியமாகிறது. இதனால் எடை குறைப்பும் சாத்தியமாகிறது.
வேர்க்கடலையில் கொழுப்பு அதிகம் உள்ளது. ஆனால் இந்த கொழுப்பு வகை உடல் இயக்கத்திற்கு தேவையான நல்ல வகை கொழுப்பாக அறியப்படுகிறது. நிறைவுற்ற மற்றும் மாற்றமடைந்த கொழுப்புகள் உங்கள் உடலுக்கு மிகவும் தீங்கு விளைவிக்கும் ஆனால் வேர்க்கடலையில் நல்ல கொழுப்பு நிறைவாக இருப்பதால், உணவு எளிதில் செரிமானம் ஆகும் வகையில் செரிமான மண்டலத்திற்கு உதவுகிறது. மேலும் ஊட்டச்சத்துகளை உறிஞ்சவும் உதவுகிறது, ஆகவே கொழுப்பு மற்றும் கார்போ சத்து பற்றிய கவலை இன்றி வேர்க்கடலையை உட்கொள்ளலாம்.
இரத்த ஓட்டத்தில் கொழுப்பு மற்றும் சர்க்கரை படிவதால் நீரிழிவு மற்றும் தீங்கு விளைவிக்கும் நிலைமைகள் உண்டாகின்றன. கார்போ மற்றும் கொழுப்புகள், இரத்தத்தில் சர்க்கரை அளவை அதிகரிப்பதால், நீரிழிவு, உடல் பருமன், உயர் கொலஸ்ட்ரால் போன்ற பாதிப்புகள் உண்டாகிறது. இரத்த சர்க்கரை அளவை சமன் செய்யும் தன்மை வேர்க்கடலைக்கு உள்ளதால், இந்த நிலைமை தடுக்கப்படுகிறது.
மற்ற உணவுப் பொருட்களை விட வேர்கடலை எளிதில் ஜீரணிக்கிறது. ஊட்டச்சத்து மிக்க இந்த கடலை, செரிமான மண்டலத்திற்குள் சென்று எளிதில் செரிமானம் ஆகிறது. வேர்க்கடலையில் நிரம்பி இருக்கும் நார்ச்சத்து மற்றும் புரதம் வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து செரிமானத்திற்கு உதவுகின்றன. எளிதாகவும், விரைவாகவும் வேர்க்கடலை ஜீரணமாவதால், எடை அதிகரிப்பு பற்றி கவலைப் பட வேண்டாம்.
பதப்படுத்தப்பட்ட உணவுப் பொருட்களால், வாய்வுத் தொல்லை, வயிறு உப்புசம் , செரிமான கோளாறு போன்றவை ஏற்படலாம். வேர்க்கடலை என்பது ஒரு இயற்கையான அதிக ஊட்டச்சத்து கொண்ட உணவுப் பொருள். இதனால் வேர்கடலை உட்கொள்வதால் வயிறு உப்புசம், வாய்வு போன்றவை ஏற்படுவதில்லை . மேலும் வளர்சிதை மாற்றம் அதிகரிப்பதால், குறிப்பிட்ட அளவு எடை குறைப்பும் உண்டாகிறது. ஆரோக்கியமற்ற சிற்றுண்டிகளை எடுத்துக் கொள்வதற்கு மாற்றாக வேர்க்கடலையை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்வதால், சௌகரியமான உணவுக் கட்டுப்பாட்டை கடைபிடிக்கலாம்.
உணவுக் கட்டுப்பாட்டில் இருப்பவர்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டிய ஒரு உணவாக வேர்க்கடலை இருக்கிறது. வேர்க்கடலையில் உள்ள நார்ச்சத்து, வயிற்றை நிரப்பி, ஒரு குறைந்த அளவு உணவுகளை மட்டுமே உட்கொள்ளும் நிலை உண்டாகிறது. வேர்க்கடலையில் புரதச் சத்து வளர்சிதை மாற்றத்தை ஊக்குவித்து, செரிமானத்திற்கு உதவுகிறது. இயற்கையான ஊட்டச்சத்துகள் கொண்ட வேர்க்கடலையில் மினரல்கள் அதிகம் உள்ளது. இதனால் வேர்க்கடலை எடுத்துக் கொள்வதால் எடை குறையும் வாய்ப்பு அதிகம் உள்ளது அறியப்படுகிறது.