இது தெரியாம போச்சே…இதை போய் இனி அதிக விலை கொடுத்து கடைல வங்காதீங்க….
கொரோனா தொற்று வரமால் தடுக்க கைகளை சுத்தம் செய்வதற்கான கற்றாழைச் சாறு ஹேண்ட் வாஷ் தயாரிப்பில் தேனியைச் சேர்ந்த மகளிர் சுய உதவிக்குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர்.
கொரோனா தொற்றிலிருந்து தப்பிக்க நாள் ஒன்றுக்கு 20 முறை கைகளை சுத்தம் செய்ய வேண்டும், முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ள நிலையில், அவற்றிற்கான தேவை அதிகரித்துள்ளது. இதனால் தேனி மாவட்ட நிர்வாகம், ஹேண்ட் வாஷ் தயாரிப்பு பணியை கொடுவிலார்பட்டியில் இயங்கும் புதுமை மகளிர் சுய உதவிக்குழுவுக்கு அளித்துள்ளது. சானிட்டரி நாப்கின் தயாரிப்பில் தமிழக அளவில் பல சாதனைகளை புரிந்துள்ள புதுமை மகளிர் சுய உதவிக்குழு, தற்போது ஹேண்ட் வாஷ் தயாரிக்கும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகிறது.
வைட்டமின் – இ திரவம் மற்றும் கற்றாழைச்சாறு கலந்து தயாரிக்கப்படும் கை கழுவும் திரவம், அரை லிட்டர் பாட்டிலில் அடைக்கப்பட்டு 45 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. கற்றாழைச் சாறு சேர்ப்பதால் நமது தோலுக்கு எந்த பிரச்னையும், எரிச்சலும் வராது எனத் தெரிவிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினர், கடைகளில் கிடைக்கும் ஹேண்ட் வாஷ் திரவத்திற்கும், நாங்கள் தயாரிக்கும் ஹேண்ட் வாஷ் திரவத்திற்கும் இதுதான் வித்தியாசம் எனக்கூறுகின்றனர்.
இதுவரை 500 லிட்டர் வீதம் மூன்று ஆர்டர்கள் பெற்றுள்ளதாகவும், தேனி அரசு மருத்துவக்கல்லூரியில் தாங்கள் தயாரித்த ஹேண்ட் வாஷ்தான் பயன்படுத்தப்படுகிறது என்றும் கூறுகின்றனர்.
தேனி மாவட்டத்தில் ஹேண்ட் வாஷ் தயாரிக்கும் ஒரே மகளிர் சுய உதவிக்குழுவினரான இவர்களுக்கு, பல்வேறு தரப்பினரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.அளவுக்கு அதிகமாக கை கழுவும் திரவத்தை பயன்படுத்த வேண்டாம். இது உடல்நலத்திற்கு நல்லதல்ல. அதிகமாக பயன்படுத்துவது சரும வறட்சி மற்றும் சரும பாதிப்புகள் ஏற்பட காரணமாக இருக்கிறது.
சாப்பிடுவதற்கு முன்பு, பிறகு மட்டுமின்றி, கழிவறை சென்று வந்த பிறகு, அழுக்கான பொருட்களை கையாண்ட பிறகு, என் வீட்டில் இருந்து வெளியே சென்று மீண்டும் வீடு திரும்பிய பிறகும் கூட கை கழுவ வேண்டும். இவ்வாறு செய்து வந்தாலே பாக்டீரியா தாக்கத்தை பெருமளவு குறைக்க முடியும்.