கொரோனா வைரஸிலிருந்து நம்மை பாதுகாக்கும் வழிமுறை.! டாக்டர் என்ன சொல்கிறார்.! வீடியோ உள்ளே:
கொரோனா வைரஸ் பற்றிய பயம் மக்களிடையே அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. மருத்துவர்கள் இதனை தடுக்க மருந்துகளை கண்டுபிடித்து கொண்டிருகின்றனர். மேலும் பரவாமல் இருக்க பல முயற்சிகளை செய்து கொண்டிருக்கின்றனர்.
நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதன் மூலம் இயற்கையாகவே பாதுகாத்துக் கொள்ளலாம்.நாம் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் பழங்கள், கீரைகள்,காய்கறிகள் மூலம் நம் உடலைப் பாதுகாத்துக் கொள்ளலாம் என டாக்டர் அஸ்வின் விஜய் கூறியுள்ளார்.
கொரோனா வைரஸ் தாக்குதலில் இருந்து நம்மை பாதுகாக்க இஞ்சியை தினமும் உணவில் சேர்த்துக் கொள்ளவேண்டும், அதை நாம் குடிக்கும் டியிலும் அல்லது ஏதேனும் ஒரு வகையில் தினமும் இரண்டு வேளை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைக் கீரைகள் குறிப்பாக அரைக்கீரை, முளைக்கீரை, முருங்கைக்கீரை, சிறுகீரை போன்றவற்றை உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
அதுமட்டுமில்லாமல் விட்டமின் சி அதிகம் உள்ள உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும். கொய்யா பழம், ஆரஞ்சு பழம், நெல்லிக்காய் போன்றவை தினமும் நாம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.மேலும் மஞ்சள், துளசி, பூண்டு, பெர்ரி வகை பழங்கள், தேங்காய் எண்ணெய் சேர்த்துக் கொள்ளலாம்.
கொரோனா வைரஸ்லிருந்து தப்பிக்க எளிய வழிமுறை. கைகளை சுத்தமாக கழுவ வேண்டும், குறிப்பாக யாருக்கும் கை கொடுக்காமல் இருக்கலாம். பொது இடங்களில் சிறு இடைவெளி விட்டு பேசவும். கைகளை வாய் கண்கள் மற்றும் மூக்கு போன்ற இடங்களில் அடிகடி வைக்காமல் இருக்க வேண்டும், ஏன் என்றால் இதன் வழியாக சுலபமாக வைரஸ் பரவும். சமைக்காத உணவுகள் இறைச்சி, முட்டை, காய்கறிகள் போன்றவற்றை உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.