குட்கா உள்ளிட்ட புகையிலை பயன்படுத்துபவர்களால் கொரோனா வேகமாக பரவும் அபாயம்!!

9 Views
Editor: 0

சென்னை : இந்தியாவில் 1 கோடிக்கும் அதிகமானோரிடம் மது குடிக்கும் பழக்கமும், 23 லட்சத்துக்கும் அதிகமானோர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. .

குட்கா உள்ளிட்ட புகையிலை பயன்படுத்துபவர்களால் கொரோனா வேகமாக பரவும் அபாயம்!!

சென்னை : இந்தியாவில் 1 கோடிக்கும் அதிகமானோரிடம் மது குடிக்கும் பழக்கமும், 23 லட்சத்துக்கும் அதிகமானோர் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. உலகளவில் 2கோடி பேர் ஹெராயின் போதைப்பொருளை பயன்படுத்துவதாக உலக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களுக்கு தமிழகத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிகரெட் விற்பனையிலும் அரசு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதில்லை. வேலூர் உட்பட பெரும்பாலான மாவட்டங்களில் புகையிலை பொருட்கள், கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாகவும் புகார்கள் எழுந்துள்ளது. தமிழகத்தில் கஞ்சா, கூல் லிப் உள்ளிட்ட போதை பொருட்கள் புழக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது.

ஆந்திர மாநிலத்தில் இருந்துதான் அதிகளவில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக போதை தடுப்பு பிரிவு போலீசார் தெரிவிக்கின்றனர். அதேபோல் புகையிலை பொருட்களை பயன்படுத்துபவர்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதால் காசநோய், ஹெபடைடிஸ், மூளைக்காய்ச்சல் உள்ளிட்ட நோய்கள் பரவுவதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது. அதேபோல் சமீப காலமாக பரவும் கொரோனாவும் எச்சில் துப்புவதால் வேகமாக பரவும் என்பது குறிப்பிடத்தக்கது. பொது இடங்களில் எச்சில் துப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த 2002ம் ஆண்டு தமிழ்நாடு புகைப்பிடித்தலையும், எச்சில் உமிழ்தலையும் தடை செய்யும் சட்டம் கொண்டுவரப்பட்டது. அதன்படி அவர்களுக்கு அபராதம் விதிக்க முடியும். இதுதவிர அந்தந்த மாவட்ட நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகள் பொது இடத்தில் எச்சில் துப்புபவர்களுக்கு அபராதம் விதிக்க சட்டங்களை இயற்ற முடியும்.

தற்போது மாஸ்க் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ள நிலையில், பலர் மாஸ்க் அணியாமல் பொது இடங்களில் எச்சில் துப்புகின்றனர். மேலும் சிலர் மாஸ்க்கை விலக்கிவிட்டு சிகரெட் புகைத்துக் கொண்டு செல்கின்றனர். எனவே நோய் ெதாற்று ஏற்படும் வகையில் பொது இடங்களில் எச்சில் துப்புவதையும் போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்கவும் அதிகாரிகள் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாகும்.

ஆரோக்கிய சமையல்