சரியாக தண்ணீர் குடிக்கவில்லை என்பதற்கான அறிகுறிகள்:
நாம் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் ஏற்படும் அறிகுறிகளை பார்க்கலாம் :மனித உடலானது உடலில் அறுபது சதவீதம் முதல் எழுபது சதவீதம் வரை தண்ணீரால் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை நாம் அனைவரும் அறிந்ததுஎனவே நாம் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் உங்கள் உடலில் உள்ள ரத்தத்திலிருந்து தண்ணீர் 8 % வரை குறையும். இது குறைந்த ரத்த நாளங்கள்,ரத்தம் உறைதல்,ரத்த அழுத்தம் அதிகரித்தல், மாரடைப்பு ,பக்கவாதம் போன்றவற்றிக்கு வழிவகுக்கும் .
மேலும் திசுக்களின் செல்களில் உள்ள இடைவெளிகளில் இருந்து தண்ணீர் 26 %வரை குறைந்து உடலின் அமிலத்தன்மையை உயர்த்துதல் கீழ் வாதம் ,சிறுநீரக கற்கள்,வலுவிழந்த எலும்புகள்,குறைந்த நோய் எதிர்ப்பு சக்தி போன்றவற்றிக்கு வழிவகுக்கிறது இறுதியாக தண்ணீர் உங்கள் உடலில் இருந்து 66 % வரை குறைந்து கொலஸ்டரோல் அளவை அதிகரித்தல்,வளர் சிதை மாற்றம் குறைதல், துரிதமாக முதிர்வடைதல் போன்றவற்றிக்கு வழிவகுக்கிறது.
நமது உடலில் போதுமான அளவு தண்ணீர் இல்லை என்பதை உணர்த்தும் அறிகுறிகளை பார்ப்போம் :
வாய் வறண்டு இருப்பதாக உணர்தல் ,வாய் வறண்டு போவது என்பது நமக்கு பொதுவான ஒன்று ஆனால் இது ஏற்படுவது என்பது நமது உடலில் போதுமான தண்ணீர் இல்லை என்பதுதான் .பொதுவாக நமது வாய் வறண்டுபோனால் உடனே குளிர்பானங்களை வாங்கி குடிப்பது வழக்கம்.ஆனால் இந்த குளிர்பானங்கள் தற்காலிகமான தீர்வுதான் நாம் தண்ணீர் குடிப்பதன் மூலம் நம் வாய் மற்றும் தொண்டையில் உள்ள மஸ்கஸ் மமரை எனப்படும் சளிச்சவ்வுகளில் உராய்வு ஏற்படுத்தி உங்கள் வாயில் உமிழ் நீரை தக்கவைக்கிறது .
உங்கள் தோல் உலர்ந்த தோற்றம் அளிக்கும்.நம் உடலில் தோல் என்பது மிக பெரிய உறுப்பாகும் எனவே தோல் ஆனது நீரேற்றம் உள்ள தாக இருக்கவேண்டும். வறண்ட தோல் என்பது நம் உடலில் ஏற்படும் நீர் இழப்பிற்கு ஆரம்ப அளவிற்கு ஒன்றாகும்.உடலில் தண்ணீர் இல்லை என்றால் உடலில் இருந்து வரும் வியர்வை குறையும் எனவே அன்றைய தினம் உடலில் இருந்து வியர்வை வழியாக வெளியேறும் கழிவுகள் உடலில் தங்கி வறண்ட தோல் மற்றும் முகப்பரு ஏற்படுத்துகிறது.
அதிகமாக தாகம் எடுக்கும் உடலில் தண்ணீர் குறைவாக உள்ளது என்பதை குறிப்பிடுவதில் தண்ணீர் தாகமும் ஒன்று. குடிப்பழக்கம் உள்ளவர்களுக்கு அதிகமாக தாகம் எடுக்கும் ஏனேனில் மதுபானம் உடலில் உள்ள நீரின் அளவை குறைத்து விடும்.எனவே மதுப்பழக்கம் உள்ளவர்கள் தண்ணீர் குடிப்பதன் மூலம் உடலில் உள்ள D கைட்ராஜன் எனப்படும் நீர் போக்கை சரிசெய்யலாம்.
கண்கள் வறண்டு காணப்படும் நாம் போதுமான அளவு தண்ணீர் குடிக்கவில்லை என்றால் நம் வாய் தொண்டை மட்டுமின்றி நமது உடலில் இன்னும் நிறைய பாதிப்புகள் ஏற்படும் நமது உடலில் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் போதுஉலர்ந்த கண்கள் மற்றும் ரத்தம் தோய்ந்த கண்களுக்கு வழிவகுக்கிறது.பொதுவாக நமது கண்களில் கண்ணீர் ஆனது கண்ணீர் குழாய்கள் எனப்படும் சிறிய குழாய்கள் மூலம் வெளிப்படுகிறது.நம் உடலில் தண்ணீர் குறையும் போது கண்ணீர் குழாய்கள் வறண்டு போகின்றன .