முகத்தில் இருக்கும் கிருமிகளை வேரோடு நீக்க பார்லர் போகாமல் வீட்டிலேயே ‘கிளேன்சிங்’ செய்வது எப்படி?
நம்மை சுற்றி இருக்கும் சூழ்நிலை, காற்று மாசு ஆகியவை நம் முகத்தில் தீவிரமான பாதிப்பை உண்டாக்குகின்றன. வெளியில் கிளம்பும் பொழுது மிகவும் ப்ரெஷாக தான் கிளம்புவோம். ஆனால் சிறிது நேரத்திலேயே அந்த பிரகாசம் நம் முகத்தில் இருந்து காணாமல் போய்விடும். இதற்கு காரணம் காற்றில் இருக்கும் நுண்கிருமிகள் நமது முகத்தில் படிந்து அசுத்தத்தை உண்டாக்குகின்றன. அதனால் முகத்தை அடிக்கடி கிளன்சிங் செய்வது மிகவும் முக்கியம். அதை பார்லர் போய் தான் செய்ய வேண்டும் என்று இல்லை.நம்முடைய வீட்டிலேயே எளிமையாக, நம்முடைய சமையலறையில் இருக்கும் சாதாரண பொருட்களை வைத்தே, நாமே செய்து கொள்ள முடியும். அதை எப்படி செய்வது? அதற்கு தேவையான பொருட்கள் என்ன? என்பதை இந்த பதிவின் மூலம் அறிந்து கொள்வோம் வாருங்கள்.
முகத்தில் இருக்கும் நுண்கிருமிகள் மற்றும் மாசுக்களை நீக்க அடிக்கடி முகத்தை சுத்தமான தண்ணீரால் கழுவ வேண்டும். முகத்தை கழுவுகிறேன் என்ற பெயரில் அடிக்கடி சோப்பு பயன்படுத்துவது தேவையற்றது. சோப்பு அடிக்கடி பயன்படுத்தினால் அதில் இருக்கும் கெமிக்கல் முகம் வறட்சி அடைய செய்யும்.
முகத்தை கிளன்சிங் செய்ய ரோஸ்வாட்டர் பெருமளவு பயன்படுத்தப்பட்டு வருகிறது. பன்னீர் ரோஜாக்கள் மூலம் தயாரிக்கப்பட்ட சுத்தமான ரோஸ் வாட்டரை காட்டன் பஞ்சு கொண்டு முகத்தை துடைத்து எடுக்க வேண்டும். இதனால் முகம் வறட்சியில் இருந்து நீங்கி மென்மையாக இருக்கும்.
காபி போட பயன்படுத்தும் காபி பவுடரை சிறிதளவு தண்ணீர் கலந்து முகத்தை நன்கு தேய்க்க வேண்டும். இதனால் முகத்தில் இருக்கும் நுண்கிருமிகள் மடிந்து முகம் மாசற்று காணப்படும். முகத்தை குளிர்ந்த நீரினால் கழுவுவது நல்லது. முகம் எப்போதும் பிரஷ்ஷாக இருக்க, வெள்ளரி சாறு மற்றும் தக்காளி சாறு இவற்றை சரிவிகிதத்தில் கலந்து முகத்தில் 10 நிமிடம் தடவி ஊற வைக்க வேண்டும். பின் சுத்தமான தண்ணீரில் முகத்தை கழுவினால் போதும் முகம் மென்மையாக புத்துணர்வுடன் மாறிவிடும்.முகத்தை க்ளென்சிங் செய்வதற்கு இரண்டு ஸ்பூன் தேனுடன், ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து அதை காட்டன் கொண்டு முகத்தில் தடவி பின் துடைத்து எடுத்தால் போதும். முகத்தில் இருக்கும் அழுக்குகள் போன்றவை நீங்கி முகம் சுத்தமடையும். பார்லர் போகாமல் முகம் ஜொலிக்க, கடலை மாவு ஒரு டீஸ்பூன் அதனுடன் அரை டீஸ்பூன் அளவிற்கு பேக்கிங் சோடா மற்றும் சிட்டிகை அளவு மஞ்சள் ஆகியவற்றை கலந்து அளவு தண்ணீர் ஊற்றி பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ள வேண்டும்.
இதனைக் கொண்டு பத்து நிமிடங்களுக்கு முகத்தை மசாஜ் செய்தால் முகத்தில் இருக்கும் அத்தனை பிரச்சனைகளும் நீங்கி பொலிவடையும். மேற்கூறிய இந்த டிப்ஸ்களை வாரம் ஒன்று என்பது போல் பயன்படுத்தி பார்த்தால் ஒரு சில வாரங்களில் நீங்களே எதிர்பாராத அளவிற்கு உங்களுடைய முகத்தில் பெரிய மாற்றங்களை உணரலாம்.
முகத்தை எப்போதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இப்போது தானே கழுவினோம் அப்புறம் பார்த்துக் கொள்ளலாம் என்று சோம்பேறித்தனப்பட்டால் அதற்குள் முகத்தில் மாசுக்கள் அதிகமாகி, வேறு சில பாதிப்புகளை உண்டு பண்ணி விடும். அடிக்கடி முகத்தை கழுவிக் கொண்டே வாருங்கள். அது போல் முகத்தை துடைக்கும் பொழுது டவல் பயன்படுத்தி அழுத்தித் துடைக்க கூடாது. லேசாக ஒற்றி எடுக்க வேண்டும். அடிக்கடி முகத்தை தொடக்கூடாது. இவற்றை கடை பிடித்தால் உங்களுடைய சருமம் மாசு மருவற்ற பிரகாசமாக ஜொலிக்கும்.