வல்லாரைக் கீரை கண் பார்வையை கூர்மையாக்கவும், ஞாபகத் திறனை அதிகரிக்கவும் உதவுகிறது. இதை வாரம் ஒருமுறையேனும் செய்து சாப்பிட்டால் நல்லது. எப்படி செய்வது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
வல்லாரைக் கீரை - 2 கப்
சிறு பருப்பு - 1/4 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 1உப்பு - தே.அ
அரைக்க
துருவிய தேங்காய் - 1/4 கப்
சீரகம் - 1 tsp
காய்ந்த மிளகாய் - 2
பொட்டுக்கடலை - 1 tsp
தாளிக்க :
எண்ணெய் - 2 tsp
கடுகு - 1 tsp
உளுத்தம் பருப்பு - 1 tsp
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை
சின்ன வெங்காயம் - 4
செய்முறை :
முதலில் அரைக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை மிக்ஸியில் மைய அரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.
குக்கரில் கீரை, சிறு பருப்பு, வெங்காயம் , தக்காளி மற்றும் 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேக வையுங்கள். 2 விசில் வந்ததும் அடுப்பை அணைத்துவிடுங்கள்.
பிரஷர் இறங்கியதும் குக்கரை திறந்து அரைத்த தேங்காய் பேஸ்டை சேர்த்துக் கலந்துவிடுங்கள். போதுமான அளவு உப்பு சேர்த்து 5 நிமிடங்களுக்குக் கொதிக்க வையுங்கள்.
கொதித்ததும் தாளிக்கக் கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வதக்கி கீரையில் சேருங்கள். சின்ன வெங்காயத்தை நறுக்கிக் கொள்ளுங்கள்.
அடுத்து நன்கு கிளறி மற்றொரு பாத்திரத்தில் மாற்றி பரிமாறுங்கள். வல்லாரைக் கீரை கூட்டு தயார்.