வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்களால் மாவட்டத்தில் கொரோனா நோய் தோற்று பருவகிறது. வாணியம்பாடியில் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் பேட்டி.
வாணியம்பாடி ஜூன் 26 : திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியில் கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு ஒரே குடும்பத்தை சேர்ந்த 6 பேர் உட்பட 8 பேருக்கு நோய் தோற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் அப்பகுதி 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிரபிக்கபட்டுள்ளது. இதனை தொடர்ந்து அப்பகுதியில் நகராட்சி சார்பில் தடுப்புகள் அமைத்தும், கிரிமி நாசினி தெளித்து வருகின்றனர். மேலும் சுகாதார துறை சார்பில் கொரோனா பரிசோதனை நடமாடும் வாகனத்தை கொண்டு பகுதி மக்களுக்கு நோய் தொர்த்று குறித்து மருத்துவர்கள் பரிசோதனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் சுகாதார பணியாளர்கள் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கபசூர குடிநீர் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவன் அருள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் விஜய்குமார் ஆகியோர் பெரியபேட்டை பகுதியில் நோய் தடுப்பு பணிகளை குறித்து ஆய்வு மேற்கொண்டனர். அப்போது மாவட்ட ஆட்சியர் சிவன் அருள் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது :-
வாணியம்பாடி பெரியபேட்டை பகுதியில் 8 பேருக்கு நோய் தோற்று உறுதியானதால் அப்பகுதி 14 நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு பிரபிக்கபட்டுள்ளது.வெளி மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களில் இருந்து வருபவர்களால் மாவட்டத்தில் கொரோனா நோய் தோற்று பருவகிறது. கிராம மக்களிடைய கொரோனா நோய் குறித்து நல்ல விழிப்புணர்வு உள்ளது. ஈ பாஸ் இல்லாமல் வருபவர்கள் தடுக்கும் வகையில் மாவட்ட எல்லைகளில் கண்காணிப்பு தீவிர படுத்தப்பட்டுள்ளது. கொரோனா நோய் தோற்று பாதிக்கப்பட்டவர்களை தாலுக்கா மருத்துவமனைகளில் சிறப்பான முறையில் சிகிச்சை அளித்து வருகின்றோம். இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின் பொது வருவாய் கோட்டாட்சியர் காயத்ரி சுப்பிரமணியம், வட்டாட்சியர் சிவபிரகாசம், நகராட்சி ஆணையாளர்(பொறுப்பு) பாபு, மருத்துவ அலுவலர் பசுபதி ஆகியோர் உடன் இருந்தனர்.