உசைன் போல்ட் சாதனையை உடைத்து இந்தியர்! யார் இவர்?

123 Views
Editor: 0

உசைன் போல்ட்டின் சாதனையையே முறியடிக்கும் அளவிற்கு ஓடியுள்ளார் கர்நாடகாவை சேர்ந்த வாலிபர் ஒருவர்..

உசைன் போல்ட்டின் சாதனையையே முறியடிக்கும் அளவிற்கு ஓடியுள்ளார் கர்நாடகாவை சேர்ந்த வாலிபர் ஒருவர்.

கர்நாடகாவின் தென்மேற்கு கடற்கரையோர மாவட்டங்களில் கம்பாலா பந்தயம் பிரபலமானது. அந்தவகையில் மங்களூரு அருகே ஐகலாவில் நடந்த கம்பாலா பந்தயத்தில் 142.50 மீட்டர் துரத்தை வெறும் 13. 62 விநாடிகளில் கடந்து அதிசயிக்க வைத்துள்ளார் சீனிவாச கவுடா என்ற வாலிபர்.

இந்த ஓட்டத்தை 100 மீட்டருக்கானதாகக் கணக்கிட்டு பார்த்தால், அதனை 9. 55 விநாடிகளில் அவர் ஓடியிருக்கிறார். இது உசைன் போல்ட்டின் உலக சாதனையை விட 0.03 விநாடிகள் குறைவான நேரம் ஆகும். 

தட்சினா கன்னடத்தில் உள்ள மிஜாரை சேர்ந்தவர் சீனிவாச கவுடா பருவகாலத்தில் கட்டுமானத் தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இந்த ஆண்டு 4 விதமான கம்பாலா பந்தயத்திலும் பரிசுகளை வென்று புதிய சாதனை படைத்துள்ளார்.


 

உலகச்செய்திகள்