பிக்பாஷ் கிரிக்கெட் அட்டவணை அறிவிப்பு

19 Views
Editor: 0


பிக்பாஷ் கிரிக்கெட் அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது..

சிட்னி, 

 

ஆஸ்திரேலியாவில் பிக்பாஷ் 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆண்டுக்கான போட்டி அட்டவணையை ஆஸ்திரேலிய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. இதன்படி 8 அணிகள் பங்கேற்கும் 10-வது பிக்பாஷ் கிரிக்கெட் தொடர் டிசம்பர் 3-ந்தேதி தொடங்கி அடுத்த ஆண்டு பிப்ரவரி 6-ந்தேதி வரை நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் அடிலெய்டு ஸ்டிரைக்கர்ஸ்- மெல்போர்ன் ரெனகேட்ஸ் அணிகள் மோதுகின்றன. மொத்தம் 61 ஆட்டங்கள் நடக்கிறது.

அடிலெய்டில் டிசம்பர் 11-ந்தேதி முதல் 15-ந்தேதி வரை இந்தியா-ஆஸ்திரேலியா இடையே பகல்-இரவு டெஸ்ட் போட்டி அரங்கேறுகிறது. இந்த 5 நாட்களும் பிக்பாஷ் போட்டிக்கு ஓய்வு நாளாகும்.

பெண்களுக்கான பிக்பாஷ் கிரிக்கெட் போட்டி அக்டோபர் 17-ந்தேதி முதல் நவம்பர் 29-ந்தேதி வரை நடைபெறுகிறது.