பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யும் இந்த நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது...

21 Views
Editor: 0

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து கிரிக்கெட் நடைபெறாமல் இருந்தாலும் கூட இதுவரை பிசிசிஐ சம்பளம் பிடித்தம் செய்யவில்லை..

பணக்கார கிரிக்கெட் வாரியமான பிசிசிஐ-யும் இந்த நடவடிக்கைக்கு தயாராகி வருகிறது:

 

கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த மார்ச் மாதம் 2-வது வாரத்தில் இருந்து கிரிக்கெட் நடைபெறாமல் இருந்தாலும் கூட இதுவரை பிசிசிஐ சம்பளம் பிடித்தம் செய்யவில்லை.

கொரோனா வைரஸ் தொற்றால் உலகம் முழுவதும் மக்கள் ஒருபக்கம் பாதிக்கப்பட மறுபக்கம் பொருளாதாரம் மிகப்பெரிய அளவில் வீழ்ச்சி அடைந்தது. நிறுவனங்களுக்க மட்டுமல்ல. கிரிக்கெட் போர்டுகளுக்கும் நிதி நெருக்கடி ஏற்பட்டது.

 

இதனால் ஆஸ்திரேலியா கிரிக்கெட் போர்டு ஆரம்ப காலக்கட்டத்திலேயே வேலைப்பார்க்கும் அதிகாரிகளை வலுக்கட்டாயமாக வெளியேற்றி, சூப்பர் மார்க்கெட் போன்ற கடைகளில் வேலை வாங்கி கொடுத்தது. மற்ற போர்டுகள் சம்பளம் குறைப்பை செய்தது.

 

உலகின் தன்னாட்சி அதிகாரம் பெற்ற பிசிசிஐ மட்டும் சம்பளம் குறைப்பு, ஆட்கள் குறைப்பு எதையும் செய்யவில்லை. சரியான நேரத்தில் வீரர்களுக்கான சம்பளத்தொகை போன்றவற்றை ரிலீஸ் செய்தது.

சுமார் ஐந்து மாதம் பிசிசிஐ எந்தவித சிக்கலையும் சந்திக்காமல் சென்றது. இந்நிலையில் நிலைமை இப்படியே தொடர்ந்தால் சம்பளம் பிடித்தம், ஆட்கள் குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதாக ஐஏஎன்எஸ் செய்தி நிறுவனத்திற்கு பெயரை வெளியிட விரும்பாத பிசிசிஐ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், அந்த அதிகாரி இதுகுறித்து கூறுகையில் ‘‘சம்பளம் பிடித்தம் குறித்து நாங்கள் இதுவரை விவாதம செய்யவில்லை. ஆனால், இதுகுறித்து ஒரு கூட்டத்தில் விவாதிக்க இருக்கும். சம்பளம் பிடித்தம், வேலை நீக்கம் போன்றவற்றை செய்தால் அதனால் ஏற்படும் பாதிப்பு போன்றவற்றை மனதில் வைத்து, முடிவு எடுக்கப்படும்.

 

சம்பளம் பிடித்தம், வேலை நீக்கம் ஆகியவற்றிற்கு மிகமிக வாய்ப்பு உள்ளது’’ என்றார்.