நியூசிலாந்து அணியுடனான இரண்டாவது ஒருநாள் சர்வதேச போட்டியில் மூன்று விக்கெட்களினால் வெற்றிவிட்டிய இலங்கை அணி 12 வருடங்களின் பின்னர் நியூசிலாந்து அணி உடன் ஒருநாள் சர்வதேச தொடரை கைப்பற்றி வரலாற்று சாதனை படைத்தது.
முதல் போட்டியில் இலங்கை அணி வெற்றியீட்டிய நிலையில் இரண்டாவது போட்டி இன்று கண்டி பல்லகலை சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக 47ஓவர்களாக நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் துடுபடுத்தாடிய நியூசிலாந்து அணி 45.1 ஓவர்களில் சகல விக்கட்களையும் இழந்து 209 ஓட்டங்களை பெற்றது.
210 என்ற இலக்கை நோக்கி பதிலெடுத்தாடிய இலங்கை அணி 45.2 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்த நிலையில் வெற்றியிலக்கை அடைந்தது. இதன் மூலம் முதல் இரு போட்டிகளில் வெற்றி பெற்று தொடரை 12 ஆண்டுகளின் பின்னர் கைப்பற்றியது. மூன்றாவதும் இறுதியுமான போட்டி நாளை மறுதினம் நடைபெறுகிறது.
*அகீல் சிஹாப்