ஆஸ்திரேலியாவிடம் ரி20 தொடரில் பாகிஸ்தானுக்கு தோல்வி

47 Views
Editor: 0

சுற்றுலா பாகிஸ்தான் - அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியிலும் வெற்றிபெற்ற ஆஸி. அணி தொடரை கைப்பற்றியுள்ளது. .

சுற்றுலா பாகிஸ்தான் - அவுஸ்திரேலிய கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான 3 போட்டிகள் கொண்ட ரி20 கிரிக்கெட் தொடரின் 2ஆவது போட்டியிலும் வெற்றிபெற்ற ஆஸி. அணி தொடரை கைப்பற்றியுள்ளது. 

சிட்னியில் நேற்று முன்தினம் நடைபெற்ற ஆட்டத்தில் முதலில் களம் இறங்கிய அவுஸ்திரேலியா 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 147 ரன்கள் சேர்த்தது. பின்னர் 148 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களம் இறங்கியது. 

உஸ்மான் கான் சிறப்பாக விளையாடி 38 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். எனினும் ஏனைய வீரர்கள் குறைந்த ரன்களில் ஆட்டமிழக்க பாகிஸ்தான் 19.4 ஓவரில் 134 ரன்கள் எடுத்து சகல விக்கெட்களையும் இழந்தது. இதனால் அவுஸ்திரேலியா 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முதல் போட்டியில் ஏற்கனவே வெற்றி பெற்றிருந்தால் 3 போட்டிகள் கொண்ட தொடரை 2-0 எனக் கைப்பற்றி முன்னிலை வகிக்கிறது. 3ஆவது போட்டி இன்று (18) நடைபெறுகிறது. 

முன்னதாக நடைபெற்ற ஒருநாள் தொடரை பாகிஸ்தான் அணி 2-1 என்ற அடிப்படையில் கைப்பற்றிய