புதுவையில் ஜீனியர் சேம்பர் மண்டல மாநாடு. முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

62 Views
Editor: 0

புதுவை ஜீனியர் சேம்பர் இண்டர்நேஷனல் இந்திய மண்டலம் 16-ன் மண்டல அலுமினிய கிளப் சார்பில் மண்டல மாநாடு தனியார் ஓடலில் நடைபெற்றது..

புதுவையில் ஜீனியர் சேம்பர் மண்டல மாநாடு. முதல்வர் ரங்கசாமி தொடங்கி வைத்தார்.

வாணியம்பாடி,நவ.28- புதுவை ஜீனியர் சேம்பர் இண்டர்நேஷனல் இந்திய மண்டலம் 16-ன் மண்டல அலுமினிய கிளப் சார்பில் மண்டல மாநாடு தனியார் ஓடலில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு மண்டல தலைவர் ஜேசீ ராஜேந்திரன் தலைமை வகித்து ஓர் ஆண்டு சாதனையை வாசித்தார்.

மண்டல மாநாட்டின் இயக்குநர் ஜேசீ ராஜா அனைவரையும் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளராக புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமி கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சாதனையாளர்களுக்கு விருதுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்.

கவுரவு விருந்தினராக ஜே.சீ.ஐ தேசிய தலைவர் அன்பழகன், துணைத்தலைவர் காளிதாஸ், மண்டல தலைவர் எழுமலை,ஜேகாம் தலைவர் விரபிரசாத் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பட்டிமன்ற பேச்சாளர் மணிகண்டன் விருது பெற்றவர்களை வாழ்த்தி பேசினார்.

மாநாட்டில் தமிழகத்தில் இருந்து ஓசூர், கிருஷ்ணகிரி, வாணியம்பாடி, ஆம்பூர், ஆற்காடு,வேலூர், ராணிப்பேட்டை, சென்னை, திருவண்ணாமலை,நெய்வேலி,

விருத்தாச்சலம் ஆகிய பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்ட சீனியர் ஜேசீக்கள்,முன்னாள் மண்டல தலைவர்கள் கணேஷ், பாலாஜி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மாநிலச்செய்திகள்