ஆம்பூர் ஓ.ஏ.ஆர் திரையரங்கம் அருகில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.

72 Views
Editor: 0

லாரிக்கு அடியில் சிக்கிய லாரி ஓட்டுநரை தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் சடலமாக மீட்டனர்..

ஆம்பூர் ஓ.ஏ.ஆர் திரையரங்கம் அருகில் சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சிமெண்ட் லோடு ஏற்றிச் சென்ற லாரி 30 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்து.

லாரிக்கு அடியில் சிக்கிய லாரி ஓட்டுநரை தீயணைப்பு மற்றும் காவல் துறையினர் சடலமாக மீட்டனர்.

---------------------

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஓ.ஏ.ஆர் திரையரங்கம் அருகில் அரக்கோணத்தில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு சென்ற லாரி 30 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்து ஏற்பட்டது. இதில் லாரி ஓட்டுநர் லாரிக்கு அடியில் சிக்கி பலியானார்.

அரக்கோணத்தில் இருந்து திருப்பத்தூர் நோக்கி (அல்ட்ராடெக்)சிமெண்ட் மூட்டைகள் ஏற்றிக்கொண்டு சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த லாரி திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் ஓ

.ஏ. ஆர் திரையரங்கம் அருகில் வந்தபோது லாரி ஓட்டுநர் தூக்க கலகத்தில் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து லாரி தேசிய நெடுஞ்சாலை நடுவில் உள்ள மேம்பாலத்தில் இருந்து 30 அடி பள்ளத்தில் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதனை தொடர்ந்து பகுதி மக்கள் உடனடியாக காவல்துறை மற்றும் தீயணைப்பு துறையினருக்கு தகவல் அளித்துள்ளனர்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத் துறையினர் மற்றும் காவல் துறையினர் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக போராடி லாரிக்கு அடியில் சிக்கிய லாரி ஓட்டுனர் அரக்கோணம் அடுத்த பணபாக்கம் பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரை சுமார் ஒருமணி நேரம் போராடி உடலை மீட்டனர்.

சம்பவம் குறித்து நகர போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மாநிலச்செய்திகள்