இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி, தனது 39வது பிறந்த நாளை வரும் 7ம் தேதி கொண்டாட இருக்கிறார். தற்போது, இந்திய அணியில் இருந்து விலகி இருக்கும் அவர், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக ஆரம்ப முதல் இருந்து வருகிறார்.
இந்திய அணிக்கு ஐசிசியின் அனைத்து கோப்பைகளையும் வென்று கொடுத்த தோனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியையும் நன்கு வழிநடத்தி வருகிறார்.
இந்த நிலையில், அவரது பிறந்த நாளையொட்டி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் சக வீரரும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் ஆல்ரவுண்டருமான பிராவோ, ஒரு பாடலை உருவாக்கியுள்ளார்.
தற்போது, அந்தப் பாடலின் டீசரை வெளியிட்டுள்ள அவர்,
நாங்கள் ஜூலை 7-க்கு தயாராகி கொண்டிருக்கிறோம். சாம்பியன் அணியுடன் சிறந்த டிராக்கோடு அவரது பிறந்த நாளை கொண்ட சென்று கொண்டிருக்கிறோம். ஹெலிகாப்டர் கொண்டாட்டத்தில் உங்களது டான்ஸ் இடம்பெற வேண்டுமா? அப்போது, ஹெலிகாப்டர் டான்ஸை ரசிகர்கள் ஆடி, அதனை வீடியோ எடுத்து @djanamusic @ultrasimmo @collegeboyjesse @arielle.alexa @dexterrthomas ஆகியவற்றுடன் டேக் செய்யுமாறு ரசிகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தப் பதிவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் பதிவிட்டுள்ளது.