வாணியம்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான மினி பேருந்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம்.

112 Views
Editor: 0

வாணியம்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான மினி பேருந்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம். போலிசார் மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை..

வாணியம்பாடி அருகே தனியாருக்கு சொந்தமான மினி பேருந்தில் ஆபத்தான முறையில் மாணவர்கள் பயணம். போலிசார் மற்றும் போக்குவரத்துதுறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை.

வாணியம்பாடி,நவ.9- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் இருந்து ஆந்திரா மாநிலம் எல்லையில் உள்ள வெலதிகாமணிபெண்டா வரை தனியார் மினி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.

இதில் வெலதிகாமணி பெண்டா மலைகிராம மக்கள் பல்வேறு பணிகள் காரணமாக தும்பேரி வரை மினி பேருந்துகளில் பயணம் செய்து வருகின்றனர்.

தும்பேரி பகுதியில் இயங்கி வரும் அரசு பள்ளி மற்றும் வாணியம்பாடியில் இயங்கி வரும் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் மலை கிராம மாணவர்கள் அந்த பேருந்துகளை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் பள்ளி மற்றும் கல்லூரி முடிந்து வீட்டிற்கு செல்லும் மாணவர்கள் அந்த பேருந்தில் பயணம் செய்து வருகின்றனர். அந்த பேருந்து தும்பேரி அடுத்த அண்ணா நகர் பகுதியில் சென்ற போது மாணவர்கள் மிகவும் ஆபத்தான முறையில் படிகட்டில் மற்றும் பேருந்தின் பின்புறமாக உள்ள ஏணியில் தொங்கிய படி செல்லுகின்றனர்.

இது போன்று ஆபத்தான பயணங்களால் விபத்துகள் மற்றும்

உயிரிழப்புகள் ஏற்படும் அபாயம் உள்ளதால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் முன்பே போக்குவரத்துறை மற்றும் போலிசார் கண்காணித்து மாணவர்கள் ஆபத்தான பயணம் மேற்கொள்ளாதவாரு தடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

உலகச்செய்திகள்