கிடு கிடுவென உயர்ந்த பிட்கொயினின் மதிப்பு

107 Views
Editor: 0


உலக வல்லரசான அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் பிட்கொயின் மதிப்பை எகிறச்செய்துள்ளது..

உலக வல்லரசான அமெரிக்காவில் நடந்து முடிந்துள்ள ஜனாதிபதி தேர்தல் பிட்கொயின் மதிப்பை எகிறச்செய்துள்ளது. ட்ரம்பின் வெற்றி க்ரிப்டோகரன்சியில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக க்ரிப்டோவின் முன்னணி கொயினான பிட்கொயின் மதிப்பு இதுவரை இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.

 

அமெரிக்க டொலர் மதிப்பில் 88,817 டொலர்களை எட்டி க்ரிப்டோ சந்தையில் முதல் இடத்தில் உள்ளது. இது இந்திய மதிப்பில் சுமார் ரூ. 75.62 இலட்சம் ஆகும். 1,00,000 டொலரை நெருங்கிக்கொண்டிருக்கும் பிட்கொயின் மதிப்பு கடந்த 24 மணி நேரத்தில் மட்டுமே 10 சதவீதம் உயர்ந்துள்ளது.

 

க்ரிப்டோகரன்சியை ஆதரிக்கப்போவதாகத் தனது பிரசாரத்தில் ட்ரம்ப் சொன்னதே பிட்கொயின் வளர்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

 

தற்போதைய நிலவரப்படி பிட்கொயின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு 1.75 ட்ரில்லியன் ஆக உள்ளது. எனவே வெள்ளியின் சந்தை மதிப்பான 1.729 ட்ரில்லியன் டொலரை தற்போது பிட்கொயின் சந்தை மதிப்பு ஓவர்டேக் செய்துள்ளது.

உலகச்செய்திகள்