ஐ.சி.சி யின் ஒக்டோபர் மாத சிறந்த வீரராக பாகிஸ்தான் வீரர் நோமன் அலி தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒக்டோபர் மாதத்துக்கான சிறந்த வீரர் விருதுக்கான போட்டியில் தென்னாபிரிக்க அணியின் வேகப் பந்துவீச்சாளர் ககிசோ ரபாடா மற்றும் சுழற்பந்துவீச்சாளர்களான பாகிஸ்தானின் நோமன் அலி மற்றும் நியூசிலாந்தின் மிட்செல் சாண்ட்னர் ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பாகிஸ்தான் வீரர் நோமன் அலி அக்டோபர் மாத சிறந்த வீரர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
பாகிஸ்தானில் நடைபெற்ற இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் தோல்வியைத் தழுவிய போதும் அடுத்தடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றிபெற்று தொடரை வென்று வரலாறு படைத்தது. இந்த இரண்டு போட்டியிலும் சராசரி 13.85 உடன் 20 விக்கெட்டுகளை வீழ்த்திய நோமன் அலி பாகிஸ்தான் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார்.