ஜப்பான் அரச குடும்பத்தின் மூத்த உறுப்பினரான இளவரசி யூரிகோ தனது 101-ஆவது வயதில் காலமானார்.
பேரரசர் ஹிரோஹிட்டோவின் இளைய சகோதரரான இளவரசர் மிகாசாவின் மனைவியும், தற்போதைய பேரரசர் நருஹிட்டோவின் அத்தையுமான இளவரசி யூரிகோ காலமாகி விட்டதாக ஜப்பானிய அரசு அறிவித்துள்ளது.
அவரது மரணத்துக்கான காரணம் குறித்து எந்த தகவலும் அளிக்கப்படவில்லை; இருந்தபோதிலும், அவருக்கு நிமோனியா பாதிப்பு இருந்ததால், அதன்காரணமாக இறந்திருக்கலாம் என்று ஜப்பான் ஊடகங்கள் கூறுகின்றன.
1923 ஆம் ஆண்டில் இரண்டாம் உலகப்போர் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்புதான், யூரிகோ தனது 18-ஆவது வயதில் இளவரசர் மிகாசாவை திருமணம் செய்தார்.
இளவரசி யூரிகோவின் காலமானதையடுத்து, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இரங்கல் தெரிவித்தார். மேலும், அவர் ``மார்ச் மாதத்தில் யூரிகோ நிமோனியாவால் பாதிப்படைவதற்கு முன்புவரையில், அவர் நன்றாகவே இருந்தார். அவர் தனது நூற்றாண்டு காலத்திலும் சிறப்பாகவே வாழ்ந்து வந்தார்’’ என்று கூறினார்.