8 அணிகள் பங்கேற்கும் 9ஆவது ஐ.சி.சி சம்பியன்ஸ் கிண்ண கிரிக்கெட் தொடர் அடுத்த ஆண்டு பெப்ரவரியில் பாகிஸ்தானில் ஆரம்பமாகவிருக்கும் நிலையில், வெற்றிக்கிண்ண சுற்றுப்பயணம் பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்திலிருந்து கடந்த சனிக்கிழமை ஆரம்பமானது.
சம்பியன்ஸ் கிண்ண தொடரை பிரபலப்படுத்தும் வகையில் வெற்றிபெற்ற அணிக்கு வழங்கப்படும் சம்பியன்ஸ் கிண்ணத்தை ஒவ்வொரு நாட்டின் முக்கிய இடங்களுக்கும் காட்சிக்கு வைக்கப்பட ஐ.சி.சி. திட்டமிட்டிருந்தது. அதன்படி வெற்றிக்கிண்ண சுற்றுப்பயணத்திற்கான அட்டவணையை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது.
இதில் பாகிஸ்தானின் காஷ்மீர் ஆக்கிரமிப்பு பகுதிகள் நீக்கப்பட்டுள்ளன.
நவம்பர் 16 - 25 வரை பாகிஸ்தான், நவம்பர் 26- 28 வரை ஆப்கானிஸ்தான், டிசம்பர் 10-13 வரை பங்களாதேஷ், டிசம்பர் 15-22 வரை தென்னாபிரிக்கா, டிசம்பர் 25 - ஜனவரி 5 வரை அவுஸ்திரேலியா, ஜனவரி 6-11 வரை நியூசிலாந்து, ஜனவரி 12 - 14 வரை இங்கிலாந்து, ஜனவரி 15 - 26 வரை இந்தியா என தொடரில் பங்கேற்கும் 8 நாடுகளுக்கும் சம்பியன்ஸ் வெற்றிக்கிண்ணம் பயணிக்கவுள்ளது.