கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை: உக்ரைன் மீது ரஷ்யாவின் தாக்குதல்
உக்ரைன் மீது ரஷ்யா தொடர் போரினை நடத்தி வரும் நிலையில், தற்போது கண்டம் விட்டு கண்டம் பாயும் பாலிஸ்டிக் ஏவுகணையை பயன்படுத்தி தாக்குதல் நடத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ரஷ்யாவின் அஷ்த்ராகான் பகுதியில் இருந்து இந்த ஏவுகணை ஏவப்பட்டது என கூறப்படுகிறது. உக்ரைன் மீதான தாக்குதல்களில் இதுவே ரஷ்யா முதன்முறையாக இத்தகைய சக்திவாய்ந்த ஏவுகணையை பயன்படுத்தி செயல்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஏவுகணை 5,000 கிலோ மீட்டருக்கும் அதிக தூரம் பறக்கும் திறன் கொண்டதாகும் என்பது குறிப்பிடத்தக்கது.