இந்தியாவில் நடைபெற்றுவரும் சையது முஷ்டாக் அலி டி20 போட்டியில் 28 பந்துகளில் சதமடித்து சாதனை படைத்திருக்கிறார் குஜராத் பிளேயர் உர்வில் படேல்.
திரிபுரா அணிக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடிய இவர், 15 பந்துகளில் அரைச்சதம் அடித்ததுடன் அடுத்த 13 பந்துகளில் சதத்தையும் பூர்த்திசெய்தார்.
இதன் மூலம் டி20 போட்டியில் மிகக் குறைந்த பந்துகளில் சதமடித்த பிளேயர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
இதற்கு முன்பு இந்த சாதனை இந்திய அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ரிஷப் பந்த் வசம் இருந்தது. அவர் 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற சையது முஷ்டாக் அலி தொடரில் ஹிமாச்சல் அணிக்கு எதிராக 32 பந்துகளில் சதமடித்திருந்தார்.