மருத்துவ படிப்பில் 50 சதவீத இடஒதுக்கீடு - உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணை!

58 Views
Editor: 0


தமிழகத்தில் மருத்துவ படிப்பிற்கு 50 சதவீத இடஒதுக்கீட்டை அமல்படுத்தக் கோரிய வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது..

Supreme Court

நாடு முழுவதும் மருத்துவ படிப்பிற்கு நீட் தேர்வு அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் இருக்கிறது. இந்நிலையில் தமிழக அரசால் ஒப்படைக்கப்படும் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களில் தமிழகத்தைச் சேர்ந்த ஓபிசி மாணவர்களுக்கு 50 சதவீத இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும் கோரிக்கை விடுத்தன. இதுதொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவானது கடந்த ஜூன் 11ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த வழக்கு தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தை நாடுமாறு அறிவுறுத்தப்பட்டது.

உலகச்செய்திகள்