இந்தியாவில் 27.3 கோடி மக்கள் வறுமையிலிருந்து மீட்கப்பட்டுள்ளனர்: ஐ.நா.,

47 Views
Editor: 0

ஜெனீவா: உலகிலேயே 2005 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில் பன்முக வறுமை சூழலிலிருந்து 27.3 கோடி இந்திய மக்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது..

ஜெனீவா: உலகிலேயே 2005 முதல் 2015 வரையிலான காலக்கட்டத்தில் பன்முக வறுமை சூழலிலிருந்து 27.3 கோடி இந்திய மக்கள் மீட்கப்பட்டுள்ளதாக ஐ.நா., தெரிவித்துள்ளது.

ஐ.நா.,வின் ஐக்கிய நாடுகள் மேம்பாட்டுத் திட்டம் (யுஎன்டிபி) மற்றும் ஆக்ஸ்போர்ட் வறுமை மற்றும் மனிதவள மேம்பாடு தொடக்கம் (ஓபிஹெச்ஐ) ஆகியவை இணைந்து ஏழ்மை குறித்த அறிக்கையை வெளியிட்டன. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2000ம் ஆண்டு முதல் 2019ம் ஆண்டுவரை 75 நாடுகளில் 65 நாடுகள் குறிப்பிடத்தக்க அளவில் பன்முக வறுமை நிலையிலிருந்து மக்களை மீட்டுள்ளன.

latest tamil news

பன்முக வறுமைக் குறியீடு(எம்பிஐ) என்பது ஏழைகளின் அன்றாட வாழ்வு, சுகாதாரக் குறைவு, கல்வியறின்மை, போதுமான தரமான வாழ்க்கைத்தரம் இல்லாமை, வேலையின்மை, வன்முறை அச்சம், ஆபத்தான சூழலில், நோய் உண்டாக்கும் சூழலில் வாழுதல் போன்றவை இதில் அடங்கும். 65 நாடுகள் பன்முக வறுமை சூழலிலிருந்து மக்களை மீட்டிருந்தாலும், இதில் 50 நாடுகள் ஏழ்மையிலிருந்து மட்டும் மீட்டுள்ளன.

latest tamil news

உலகில் வளர்ந்து வரும் 107 நாடுகளில் 130 கோடி மக்கள் அதாவது 22சதவீதம் பேர் பன்முக வறுமைச் சூழலில் வாழ்ந்து வருகின்றனர். இந்த வறுமைச் சூழலில் குழந்தைகள்தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள். 2005ம் ஆண்டு முதல் 2015ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் பன்முக வறுமை சூழலிலிருந்து 27.30 கோடி மக்களை இந்தியா மீட்டுள்ளது. இந்த காலக்கட்டத்தில் அதிகமானோரை மீட்டுள்ள நாடாக இந்தியா திகழ்கிறது. இந்தியாவில் 130 கோடி மக்களி்ல் பாதிப்பேர் (65 கோடி) மக்கள் 18 வயது நிறைவடையாதவர்கள். 10.70 கோடி பேர் 60 வயதை கடந்தவர்கள். இவ்வாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

உலகச்செய்திகள்