விண்வெளியில் இறந்த சடலத்தை வீசினால் என்ன நடக்கும் என என்றாவது ஆராய்ந்ததுண்டா? நாங்க ஏன் இறந்த சடலத்தை அங்கு கொண்டு போய் வீசப்போகிறோம் என நினைக்கிறீர்களா? வேடிக்கையான ஒன்றுதான். ஆனால் இது குறித்து தேடிய போது கிடைத்த பதில் வியப்பில் ஆழ்த்தியது.
விண்வெளியில் இறந்து போகும் சடலத்தின் மீது எந்த ஒரு விசையும் செயல்படாதவரை ஒரே திசையில் ஒரே வேகத்தில் நகர்ந்து கொண்டே இருக்கும். காற்று இல்லாத வெற்றிடம் என்பதால் சடலம் குளிரில் உறைந்து போய் அப்படியே அலையும். ஏதாவது ஒரு கோளின் ஈர்ப்பு விசைக்குள் சென்று கோளின் மீது மோதி சிதறும். இது இல்லாமல் விண்வெளியில் உள்ள எந்த ஒரு விண்கற்கள் மீது மோதவில்லையெனில் பல மில்லியன் ஆண்டுகள் ஆயினும் அப்படியே சுற்றி கொண்டிருக்கும்.
விண்வெளியில் ஒரு வீரர் இறந்துவிட்டால், உடலை வெளியே வீச முடியாது. ஏனெனில் அங்குள்ள பனி மற்றும் ஈர்ப்பு விசை இல்லாமை காரணமாக உடலானது அங்கேயே சுற்றி கொண்டிருக்கும். முக்கியமாக அங்கு ஆக்சிஜன் இல்லாத காரணத்தால், இறந்த உடலில் ஏற்படும் வேதியியல் மாற்றங்கள் விண்வெளியில் நடப்பதில்லை.
இந்த நிலையில் இரண்டே நிகழ்வுகள் தான் நடக்கும். அதீத குளிரினால் உடல் முழுக்க விரைத்து போய் கட்டை போன்று மாறிவிடும். இல்லையெனில் விண்வெளியில் உள்ள அதீத வெப்பமானது உடலில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சி உடலானது மம்மி போல ஆகிவிடும். இதுமட்டுமே நடக்கும்.