தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறீர்களா?

48 Views
Editor: 0

தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறீர்களா? தனிமைப்படுத்தப்பட்டவரை பராமரிக்கிறீர்களா? கட்டாயம் இதைத் தெரிந்துகொள்ளுங்கள்...

தங்கியுள்ள அறை மற்றும் மேசை, கைப்பிடி, தாழ்ப்பாள் போன்றவற்றை கிருமி நாசினி (.(1% சோசியம் ஹைப்போகுளோரைடு அல்லது 2.5% லைசால்) கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

கொரோனா தொற்றுப் பரவலில் இருந்து மக்களைக் காக்கவும், தொற்று ஏற்பட்டால் கடைபிடிக்க வேண்டிய ஆரோக்கிய முறைகளை, பொதுமக்கள் நலன் கருதி, பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. அவை என்னென்னவென்று விரிவாகத் தெரிந்துகொள்ளவும். இந்த நோய்க்காலத்தை வெற்றிகரமாக கடக்க வாழ்த்துக்கள்.

தனிமைப்படுத்தப்பட்ட நபர்கள் மற்றும் அவர்களின் பராமரிப்பாளர்கள் பின்பற்றி நடக்க வேண்டிய நடைமுறைகள் பின்வருமாறு:


தனிமைப்படுத்தப்பட்டோர் பின்பற்ற வேண்டியவை:

1. தனி அறையில் இருப்பதுடன் மற்ற குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து விலகி இருக்க வேண்டும்.

2. உடைகள், படுக்கை விரிப்புகளை சோப்பு போட்டு துவைத்து வெயிலில் உலர்த்திய பிறகு பயன்படுத்தவேண்டும்.3. தங்கியுள்ள அறை மற்றும் மேசை, கைப்பிடி, தாழ்ப்பாள் போன்றவற்றை கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.(1% சோசியம் ஹைப்போகுளோரைடு அல்லது 2.5% லைசால்)

4. மருத்துவரின் ஆலோசனைகளை தவறாமல் கடைபிடிப்பதுடன், ஏதேனும் அறிகுறிகள் (காய்ச்சல், மூச்சுத்திணறல்) ஏற்பட்டால், உடனே மருத்துவரை அணுக வேண்டும்.

தனிமைப்படுத்தப்பட்டவர்களை பராமரிப்பவர்கள் பின்பற்ற வேண்டியவை:

1. தனிமைப்படுத்தப்பட்ட நபர் பயன்படுத்திய பொருட்களைப் பயன்படுத்தக்கூடாது.

2. தனிமைப்படுத்தப்பட்டவருக்கு அவருடைய அறையில் உணவு வழங்கியதும், பாத்திரங்கள் மற்ற பொருட்களை கையுறை அணிந்து சோப்பு போட்டு கழுவவும்.

3. மற்ற குடும்ப உறுப்பினர்களுக்கு அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.


 

உலகச்செய்திகள்