கொரோனா பாதிப்பு: உலக அளவில் 1.44 கோடியை தாண்டியது

46 Views
Editor: 0

உலக அளவில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1.44 கோடியை தாண்டியுள்ளது..

ஜெனிவா

 

சீனாவில் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கொரோனா வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வைரஸ் தற்போது உலகின் 213 நாடுகள்\ பிரதேசங்களுக்கு பரவி பெரும் மனித பேரழிவை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், தற்போதைய நிலவரப்படி, உலகம் முழுவது 1 கோடியே 44 லட்சத்து 22 ஆயிரத்து 125 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 6 லட்சத்து 4 ஆயிரத்து 819 பேர் உயிரிழந்துள்ளனர்.

வைரஸ் பரவியவர்களில் 52 லட்சத்து 6 ஆயிரத்து 70 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். சிகிச்சை பெறுபவர்களில் 59 ஆயிரத்து 910 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. கொரோனாவில் இருந்து 86 லட்சத்து 11 ஆயிரத்து 236 பேர் கொரோனா பதிப்பில் இருந்து குணமடைந்துள்ளனர். 

 

கொரோனா அதிகம் பரவிய நாடுகள்:-

 

அமெரிக்கா - 38,33,017

பிரேசில் - 20,75,124

இந்தியா - 10,38,716 

ரஷியா - 7,65,437

தென் ஆப்பிரிக்கா - 3,50,879

பெரு - 3,49,500

மெக்சிகோ - 3,31,298 

சிலி - 3,28,846

ஸ்பெயின் - 3,07,335

இங்கிலாந்து - 2,94,066

ஈரான் - 2,71,606

பாகிஸ்தான் - 2,61,916

சவுதி அரேபியா - 2,48,416

இத்தாலி - 2,44,216

துருக்கி - 2,18,717

ஜெர்மனி - 2,02,572

வங்காளதேசம் - 2,02,066

உலகச்செய்திகள்