கொரோனா வைரஸ் பாதிப்பு உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. வைரஸ் பாதித்து இறப்பவர்களின் உடலை உறவினர்களுக்கு கூட கொடுக்காமல் மருத்துவமனை நிர்வாகமே பாதுகாப்பு நடைமுறைகளுடன் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றனர். இதனால் உறவினர்கள் பலர் உடலை காண முடியாமல் தவித்துள்ளனர். அதுபோன்ற சோகமான நிகழ்வு ஒன்று பாலஸ்தீன நாட்டில் அரங்கேறி உள்ளது.
மேற்கு கரையில் பீட் ஆவா பகுதியை சேர்ந்த இளைஞர் ஜிகாத் அல் ஸ்வைட்டி, 73 வயதான கொரோனா பாதிக்கப்பட்ட தனது தாயை பார்க்க மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அவர் மருத்துவமனைக்கு சென்ற சிறிது நேரத்தில் அவரது தாயார் இறந்துள்ளார். இதனை கேள்விப்பட்ட ஜிகாத் கதறி அழுதுள்ளார்.
கொரோனாவால் பாதிக்கப்பட்டதால் தாயின் உடலை கூட அவரால் பார்க்க முடியவில்லை. இதில் மனமுடைந்த ஜிகாத் அங்கிருந்து ஜன்னலில் ஏறி தனது இறந்த தாயின் உடலை பார்த்து அழுதுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.