ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தனது விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப திறன்களை வளர்த்துக் கொள்ளவும், எண்ணெயை சார்ந்திருப்பை குறைக்கவும் பாடுபட்டு வரும் இவ்வேளையில் திங்களன்று செவ்வாய் கிரகத்திற்கு தனது முதல் விண்கலத்தை ஏவியது.
செவ்வாய் கிரகத்தில் ஏழு மாதம் பயணம் மேற்கொண்டு அதன் சுற்றுப்பாதை மற்றும் வளிமண்டலம் குறித்த தகவல்களை அனுப்ப ஜப்பானின் தானேகாஷிமா விண்வெளி மையத்திலிருந்து (Japan’s Tanegashima Space Center) அதிகாலை 1:58 மணிக்கு ஹோப் ப்ரோப் (Hope Probe) விண்ணில் ஏவப்பட்டது.
செவ்வாய் கிரகத்திற்கான முதல் ஏவுதல் ஆரம்பத்தில் ஜூலை 14 அன்று திட்டமிடப்பட்டிருந்தது, ஆனால் மோசமான வானிலை காரணமாக இரண்டு முறை தாமதமானது.
ஏவப்பட்ட ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, ப்ரோப் விண்கலம் அதன் அமைப்புகளுக்கு சக்தி அளிக்க சோலார் பேனல்களை செயல்படுத்தியது மற்றும் பூமியில் உள்ள தளத்தில் ரேடியோ வழி தகவல்தொடர்புகளை ஏற்படுத்தியது.
செவ்வாய் கிரகத்தை ஆராயும் பணியில் தற்போது எட்டு செயலில் உள்ள விண்கலங்கள் உள்ளன; சில கிரகத்தை சுற்றி வருகின்றன, சில அதன் மேற்பரப்பில் இறங்கியுள்ளன. சீனாவும் அமெரிக்காவும் தனித்தனியே இந்த ஆண்டு இன்னொரு விண்கலத்தை ஏவவும் திட்டமிட்டுள்ளன.
இந்த எமிரேட்ஸ் மார்ஸ் மிஷன் (Emirates Mars Mission) திட்டத்திற்கு 200 மில்லியன் டாலர் செலவிடப்பட்டதாக மேம்பட்ட அறிவியல் அமைச்சர் சாரா அமிரி தெரிவித்துள்ளார். தினசரி மற்றும் பருவகால மாற்றங்களைப் படிப்பதன் மூலம் முதன்முறையாக செவ்வாய் வளிமண்டலத்தின் முழுமையான படத்தை வழங்குவதையும் இந்த ஆய்வுக்கான விண்கலம் நோக்கமாகக் கொண்டுள்ளது.
முதன்முதலில் 2014 ஆம் ஆண்டு இந்த ஏவுதலுக்கான திட்டங்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அறிவித்தது மற்றும் உள்ளூர் நிபுணத்துவத்தை வளர்ப்பதற்காக 2017 ஆம் ஆண்டில் ஒரு தேசிய விண்வெளி திட்டத்தை அறிமுகப்படுத்தியது. அதன் மக்கள் தொகை 9.4 மில்லியன், அவர்களில் பெரும்பாலோர் வெளிநாட்டுத் தொழிலாளர்கள். மேலும் பெரிய விண்வெளிப் பயணம் செய்யும் நாடுகளின் அளவுக்கு அறிவியல் மற்றும் தொழில்துறை தளம் இல்லை. இருந்த போதிலும் இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளது
இது 2117 வாக்கில் செவ்வாய் கிரகத்தில் குடியேற வேண்டும் என்ற ஒரு லட்சியத் திட்டத்தைக் கொண்டுள்ளது. கடந்த செப்டம்பரில் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்ற ஹஸ்ஸா அல்-மன்சௌரி (Hazza al-Mansouri) தான் அங்கு சென்ற முதல் எமிராட்டி ஆனார்.
ஹோப் ப்ரோப் விண்கலத்தை உருவாக்கி கட்டமைக்க, எமிரேடிஸ் மற்றும் துபாயின் முகமது பின் ரஷீத் விண்வெளி மையம் (Emiratis and Dubai’s Mohammed Bin Rashid Space Centre- MBRSC) அமெரிக்க கல்வி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றின.
துபாயில் உள்ள MBRSC தனது 494 மில்லியன் கி.மீ (307 மில்லியன் மைல்) பயணத்தின் போது விண்கலத்தை சராசரியாக மணிக்கு 121,000 கி.மீ வேகத்தில் கண்காணிக்கும்.