ஆச்சர்யத்தக்க வகையில் பாகிஸ்தான், சமூகத்தில் ஆபாசம் மற்றும் ஒழுக்கக்கேடுகளை உண்டாக்கும் டிக்டாக் போன்ற செயலிகளை கட்டுப்படுத்த ஒரு விரிவான ஒழுங்குமுறை விதிகளை அமல்படுத்துவதற்காக, சீனாவைச் சேர்ந்த பைட் டான்ஸுக்கு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.
மின்னணு குற்றங்கள் தடுப்புச் சட்டத்தின் கீழ் லைவ் ஸ்ட்ரீமிங் செயலியான பிகோவைத் தடை செய்த பின்னர் பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையத்தின் எச்சரிக்கை வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்த எச்சரிக்கையை வெளியிடும் போது, பாகிஸ்தான் தொலைத்தொடர்பு ஆணையம் (பி.டி.ஏ), “சமூக ஊடக செயலிகளில் குறிப்பாக டிக்டாக் மற்றும் பிகோவில் ஒழுக்கக்கேடான, ஆபாசமான மற்றும் மோசமான உள்ளடக்கங்கள் அதிகமாக இருப்பதாக பல்வேறு பிரிவுகளிலிருந்து புகார்கள் வந்துள்ளன. மேலும் அவை இளைஞர்களிடையே மிகவும் எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தின.” என தெரிவித்துள்ளது.
பிகோ மற்றும் டிக்டாக் மட்டுமல்லாது ஜூலை 1’ம் தேதி முதல் போதை மற்றும் வீரர்களின் ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிப்பதாக கூறி பப்ஜி விளையாட்டையும் தடை செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.