அமெரிக்காவின் எண்ணெய் ஜாம்பவானுக்கே இந்த நிலையா.. 21,000 பேரை வீட்டுக்கு அனுப்ப திட்டம்..!

46 Views
Editor: 0

அமெரிக்காவின் எண்ணெய் ஜாம்பவான் ஆன ஸ்க்லம்பெர்கர் 21,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது..

அமெரிக்காவின் எண்ணெய் ஜாம்பவான் ஆன ஸ்க்லம்பெர்கர் 21,000-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. சுமார் 1 லட்சம் ஊழியர்கள் பணிபுரியும் இந்த நிறுவனத்தில் 140க்கும் மேற்பட்ட நாடுகளில் உள்ள ஊழியர்கள் பணி புரிந்து வருகின்றனர். இந்த நிறுவனம் 120 நாடுகளில் தனது சேவையினை வழங்கி வருகின்றது. கிட்டதட்ட நான்கில் ஒரு பங்கு ஊழியர்களை பணி நீக்கம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. இது கடந்த வியாழக்கிழமையன்று இந்த நிறுவனம் 3.4 பில்லியன் டாலர் நஷ்டம் கண்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

 

உலகச்செய்திகள்