முத்திரைத்தாள் கட்டணம் பற்றி தெரிந்துகொள்ளலாம் வாங்க..!

44 Views
Editor: 0

அதிகமாக திட்டமிட்டு எடுக்கவேண்டிய முடிவுகளில் வீடு வாங்குவதும் ஒன்று. அதிலும் குறிப்பாக முதல்முறையாக வீடு வாங்கும் போது, அதனுடன் வரும் பொருளாதார சுமைகளை தவிர்த்து ஏராளமான விசயங்களை புரிந்துகொள்வதும் கவனிப்பதும் அவசியமாகிறது..

அதிகமாக திட்டமிட்டு எடுக்கவேண்டிய முடிவுகளில் வீடு வாங்குவதும் ஒன்று. அதிலும் குறிப்பாக முதல்முறையாக வீடு வாங்கும் போது, அதனுடன் வரும் பொருளாதார சுமைகளை தவிர்த்து ஏராளமான விசயங்களை புரிந்துகொள்வதும் கவனிப்பதும் அவசியமாகிறது. பள்ளி மற்றும் பணியிடத்திற்கு அருகாமையில் உள்ள இடத்தை தேர்வு செய்வதில் துவங்கி, வீட்டுக்கடன் விண்ணப்பம், முதல்கட்ட பணம் செலுத்துதல், விற்பனை ஒப்பந்தம் என பட்டியல் நீண்டுகொண்டே செல்லும். கூடுதலாக, நீங்கள் வாங்கும் வீட்டை உரிமை கொண்டாடும் விதமாக உங்களின் பெயரில் அதை பதிவு செய்யவேண்டும்.இது தான் அந்த வீடு உங்களுக்கு சொந்தமானது என்பதற்கான சட்டப்பூர்வமான ஆதாரம். உள்ளாட்சி அமைப்புகளின் பதிவேடுகளில் வீட்டை விற்பவர் அதை உங்கள் பெயருக்கு மாற்றியதை ஆவணப்படுத்தவேண்டும். ஆனால் அதை செய்யும் போது முத்திரைத்தாள் வரி என அழைக்கப்படும் கட்டணத்தை அரசுக்கு செலுத்த வேண்டும்.

 முத்திரைத்தாள் கட்டணம் என்றால் என்ன?
முத்திரைத்தாள் கட்டணம் என்றால் என்ன?

ஒரு சொத்தின் உரிமையை வேறு ஒருவருக்கு மாற்றம் செய்வதற்கு அரசாங்கத்தால் விதிக்கப்படும் வரி. இது இந்திய முத்திரைத்தாள் சட்டம் 1899ன் பிரிவு 3ன் கீழ் வசூலிக்கப்படுகிறது. பதிவுசெய்யப்படும் போது அந்த குறிப்பிட்ட சொத்தின் மதிப்பை பொறுத்து முத்திரைத்தாள் கட்டணம் நிர்ணயிக்கப்படும். மேலும் அந்த சொத்து இருக்கும் மாநிலம் அல்லது பகுதியை பொறுத்தும், புதிய அல்லது பழைய கட்டுமானமா என்பதை பொறுத்தும் கட்டணம் கணக்கிடப்படுகிறது. எனவே புதிதாக வீடு அல்லது சொத்தை வாங்கும் போது முத்திரைத்தாள் கட்டணம் என்பது கூடுதலாக நாம் செலளிக்கும் தொகை. ஆகவே நாம் வாங்கும் வீடு உள்ள பகுதி அல்லது வீட்டின் வகையை பொறுத்து இந்த கட்டணம் எப்படி விதிக்கப்படுகிறது என்பதை புரிந்துகொள்வது மிகவும் முக்கியம்.

 முத்திரைத்தாள் கட்டணம் செலுத்துதல்
முத்திரைத்தாள் கட்டணம் செலுத்துதல்

முத்திரைத்தாள் கட்டணத்தை முழுவதுமாக செலுத்தவேண்டும்.

*முத்திரைத்தாள் கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் அபராதம் செலுத்த நேரிடும்.

*சட்டப்பூர்வ ஆவணமான இவை நீதிமன்றத்தில் ஆதாரமாக பயன்படுத்தலாம் மற்றும் இவற்றிற்கு மதிப்பும் உள்ளது.

* பத்திரத்தை பதிவு செய்வதற்கு முன்பாகவோ அல்லது பதிவு செய்யும் நாள் அன்றோ அல்லது பதிவு செய்து ஒரு வேலை நாளிலேயோ கட்டணம் செலுத்துவது அவசியமாகிறது.

*பொதுவாக சொத்தை வாங்குபவரே இந்த கட்டணத்தை செலுத்துவர்.சொத்து பரிமாற்றம் செய்யும் போது, வாங்குபவரும் விற்பவரும் சரிசமமாக கட்டணத்தை பகிர்ந்துகொள்ள வேண்டும்.

*கட்டணத்தை முழுவதுமாக செலுத்த தவறினால், பாக்கிவைத்துள்ள தொகையின் மீது அபராதமாக மாதம் 2% என அதிகபட்சமாக 200% வரை விதிக்கப்படும்.



பத்திரங்களை பதிவுசெய்தல்

*முத்திரைத்தாள்களை வாங்குபவர் அல்லது விற்பவர் பெயரில் மட்டுமே வாங்க வேண்டும் மற்றும் அது வாங்கியதில் இருந்து 6 மாதங்களுக்கு மட்டுமே செல்லத்தக்கது. ஆனால் கட்டணத்தை சரியான நேரத்தில் செலுத்தியிருந்தால் மட்டுமே இது பொருந்தும்.

*இந்த ஆவணத்தை செயல்படுத்துபவர் ஒட்டப்பட்டுள்ள ஸ்டாம்ப்ன் மீது எழுதியோ அல்லது அவர் பெயரை அடித்தோ அதை இரத்து செய்யலாம். இல்லையெனில் அந்த ஆவணம் பதிவு செய்யப்படாததாக கருதப்படும்.

* முத்திரை தெளிவாக புலப்படும் வகையில் இருக்க வேண்டும்.

 முக்கியமான தேவைகள்
முக்கியமான தேவைகள்

*முக்கியமான தகவல்கள் இல்லையெனில் மதிப்பீட்டு அலுவலர் ஆவணத்தை திருப்பியனுப்பும் வாய்ப்புள்ளது. எனவே முத்திரைத்தாள் செயல்முறையை வேகப்படுத்த வீடு இருக்கும் பகுதி, கட்டப்பட்ட ஆண்டு, அடுக்குகளின் எண்ணிக்கை போன்ற தகவல்களை சரியாக குறிப்பிட வேண்டும்.

* உயில் மூலம் பரிமாற்றம் செய்யப்பட்ட சொத்துக்களை தவிர்த்து மற்ற அனைத்து அசையா சொத்து பரிமாற்றத்திற்கும் முத்திரைத்தாள் கட்டணம் செலுத்த வேண்டும்.(கூட்டுறவு வீட்டுவசதி வங்கி மூலம் விற்கப்படும் சொத்துக்களுக்கும் கட்டணம் இல்லை)

*சட்டப்பூர்வமான வாரிசுகளுக்கு சொத்துக்களை மாற்றும் போதும் , சொத்தின் சந்தை மதிப்பிற்கு ஏற்ப கட்டணம் செலுத்த வேண்டும்.

*பாகப்பிரிவினை பத்திரம், அடமானப்பத்திரம், விற்பனை சான்றிதழ், பரிசு பத்திரம், பரிமாற்றப் பத்திரம், குத்தகை பத்திரம், உரிம ஒப்பந்தம் போன்ற அனைத்து தேவையான ஆவணங்களையும் சமர்பிக்க வேண்டும்.





 

உலகச்செய்திகள்