இந்தியாவுக்கு எதிராக (Bio war) உயிரி போர்?

45 Views
Editor: 0

ஆபத்தான உயிரியல் ஆயுத திறன்களை விரிவுபடுத்துவதற்கான மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் சீனாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது..

இந்தியாவுக்கு எதிராக (Bio war) உயிரி போர்?  சீனாவும் பாகிஸ்தானும் ரகசிய ஒப்பந்தம் போட்டிருப்பதாகத் தகவல்..

இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக, ஆபத்தான உயிரியல் ஆயுத திறன்களை விரிவுப்படுத்த. சீனாவும் பாகிஸ்தானும் ரகசிய ஒப்பந்தங்கள் செய்துக் கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் ஊஹான் மாகாணத்தில் உள்ள வைரஸ் ஆராய்ச்சி மையத்திலிருந்தே கொரோனா வைரஸ் பரவியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டை மருத்துவ நிபுணர்களும் விஞ்ஞானிகளும் மறுத்து வருகின்றனர். இந்நிலையில் தி கிளாக்சன் செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ள தகவல்களில், இந்தியா மற்றும் மேற்கத்திய நாடுகளுக்கு எதிராக ஆபத்தான உயிரியல் ஆயுத திறன்களை விரிவுபடுத்துவதற்கான மூன்று ஆண்டு ஒப்பந்தத்தில் சீனாவும் பாகிஸ்தானும் கையெழுத்திட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

ஆபத்தான ஆந்த்ராக்ஸ் தொடர்பான பல ஆராய்ச்சி திட்டங்கள் , இந்த ஒப்பந்தத்தில் அடங்கும். கொரோனா வைரஸ் உருவாகியதாக கூறப்படும் Wuhan Institute of Virology, மற்றும் DESTO எனப்படும் பாகிஸ்தானின் ராணுவ அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கழகத்திற்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.

உஹான் ஆய்வகம். பாகிஸ்தானுக்கு உதிரிபாகங்களை வழங்கியதுடன், வைரஸ் சேகரிப்பு தரவுத்தளத்தை உருவாக்க விஞ்ஞானிகளுக்கு நோய்க்கிருமிகள் மற்றும் உயிர் தகவல்தொடர்புகளை கையாள பயிற்சியையும் அளித்துள்ளது.

உயிரியல் பூச்சிக்கொல்லியாகப் பயன்படுத்தப்படும் பேசிலஸ் துரிங்ஜென்சிஸ் எனப்படும் பாக்டீரியத்தை பிரிக்க வெற்றிகரமான மண் மாதிரி சோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் பாகிஸ்தானின் மண்ணில் நடத்தப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தானை செயல்பட வைப்பதே சீனாவின் முக்கிய நோக்கம் என்ற விமர்சனங்களும் எழுந்துள்ளன.

 

உலகச்செய்திகள்