ரஷ்யாவில் கபரோவ்ஸ்க் பகுதியின் ஆளுநர் செர்ஜி ஃபுர்கல் கைது செய்யப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்து மூன்றாவது வாரமாக போராட்டங்கள் தொடர்ந்து வருகின்றன.
15 ஆண்டுகளுக்கு முன்பு இரண்டு தொழிலதிபர்களைக் கொலை செய்ய உத்தரவிட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட செர்ஜி ஃபுர்கல் இந்த மாதத் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். இதனை எதிர்த்தும், அதிபர் புதினை பதவி விலகக் கோரியும் கபரோவ்ஸ்க்கில் நடைபெற்ற போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டனர்.