தமிழகத்தில் அண்மைக்காலமாக கந்த சஷ்டி கவசம் பெரிய விவாதத்தில் சிக்கியுள்ளது. மனிதனுக்கு நோய்களை தீர்க்கும் மந்திரமாக போற்றப்படும் பெருமையும் கந்த சஷ்டி கவசத்துக்கு உண்டு. இந்த கந்த சஷ்டி கவசத்தை கருபர் கூட்டம் என்னும் யூடியூப் சேனல் வரிக்கு, வரி விமர்சனம் செய்கிறேன் என்னும் பெயரில் அதை புண்படுத்தியதாக சர்ச்சை எழுந்தது.
இதனைத் தொடர்ந்து விமர்சித்து பேசிய சுரேந்திரன் என்பவர் பாண்டிச்சேரியில் போலீஸுல் சரண் அடைந்தார். கருப்பர் கூட்டத்தின் அனைத்து வீடியோக்களும் இப்போது அழிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சூப்பர் சிங்கர் பாடகி பிரியங்கா கந்த சஷ்டி கவசத்தை பாடி இருக்கிறார்.
இது முருக பக்தர்களையும், பிரியங்கா ரசிகர்களையும் சந்தோசப்பட வைத்துள்ளது. கந்த சஷ்டி கவசத்தை பிரியங்கா பாடும் பாடலின் ட்ரெய்லர் இப்போது ரிலீஸ் ஆகியுள்ளது. அது ஆன்மீக நண்பர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டியுள்ளது. இதோ அந்த ட்ரெய்லர் வீடியோ..