பிரான்சிடம் இருந்து சுமார் 60,000 கோடி ரூபாய் மதிப்பில், 36 ரபேல் போர் விமானங்களை வாங்க இந்தியா ஒப்பந்தம் மேற்கொண்டது.
இதில் முதல்கட்டமாக 5 போர் விமானங்கள் இன்று இந்தியா புறப்பட்டுள்ளன. இந்த விமானங்கள் வரும் வழியில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நிறுத்தப்பட்டு எரிபொருள் நிரப்பப்பட உள்ளது.
இதையடுத்து 5 ரபேல் போர் விமானங்களும் ஹரியானா மாநிலத்தில் உள்ள அம்பாலா விமானப்படை தளத்தை வந்தடைய உள்ளன. பின்னர் இவை இந்திய விமானப்படையில் இணைக்கப்பட உள்ளன.