இந்தியாவில் முதலீடு செய்ய உள்துறையின் அனுமதிக்காக காத்திருக்கும் 200 சீன நிறுவனங்கள்

39 Views
Editor: 0

இந்தியாவில் முதலீடு செய்வதற்காக சீனாவை சேர்ந்த 200 நிறுவனங்கள் மத்திய உள்துறை அமைச்சக அனுமதிக்காக காத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது..

கொரோனா பெருந்தொற்றால் தொழில்துறை முடங்கியுள்ள நிலையில், இந்திய நிறுவனங்களை வெளிநாட்டினர் கையகப்படுத்துவதை தடுப்பதற்காக மத்திய அரசு அந்நிய முதலீடு கொள்கையில் ஏப்ரல் மாதம் திருத்தங்களை கொண்டு வந்தது.

இதன்படி, இந்தியாவுடன் நிலப்பரப்பை பகிர்ந்து கொள்ளும் சீனா, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்யும்பட்சத்தில் மத்திய உள்துறை அமைச்சக அனுமதியை பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டது.

அந்நிய நேரடி முதலீட்டு கொள்கையில் மாற்றம் செய்யப்பட்டது முதல் தற்போது வரை 200 சீன நிறுவனங்கள் இந்தியாவில் முதலீடு செய்வதற்காக விண்ணப்பித்துள்ளதாகவும், அதில், ஒரு நிறுவனத்திற்கு கூட உள்துறை அமைச்சகம் அனுமதி வழங்கவில்லை என்றும் கூறப்படுகிறது.

சீன நிறுவனங்களின் முதலீடுகளுக்கு அனுமதி வழங்குவதில் காலதாதம் மற்றும் கடும் கட்டுப்பாடுகள் காரணமாக பல நிறுவனங்கள் முதலீடு செய்யும் முடிவை திரும்பப் பெறும் என்று கூறப்படுகிறது.

உலகச்செய்திகள்