பசியால் சாகும் குழந்தைகள் இந்தியாவில்தான் அதிகம்: பாகிஸ்தானை விட படுமோசம்

46 Views
Editor: 0

2015இல் 93வது இடத்தில் இருந்த இந்தியா தொடர்ந்து சரிவையே சந்தித்துள்ளது. சென்ற ஆண்டில் 103வது இடத்தில் இருந்த இந்தியா இந்த ஆண்டு ஒரே இடம் முன்னேறியுள்ளது..

ஹைலைட்ஸ்:

  • இந்தத் தரவரிசையில் 117 நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.
  • உலகிலேயே குழந்தைகள் இறப்பு விகிதம் இந்தியாவில்தான் அதிகம்.

உலக அளவில் பசிக் கொடுமை ஒழிப்பு நடவடிக்கைகள் அடிப்படையில் இந்தியாவின் இடம் பாகிஸ்தான், இலங்கை, வங்கதேசம், நேபாளம் முதலிய அண்டை நாடுகளைவிட மிக மோசமான நிலையில் உள்ளது.

உலகளாவிய பசி ஒழிப்பு நாடுகளின் தர வரிசை ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் வெளியிடப்படும். 2006ஆம் ஆண்டு முதல் சர்வதேச உணவுக் கொள்கை ஆராய்ச்சி நிறுவனம் என்ற அமைப்பால் இந்தத் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்படுகிறது. 2019ஆம் ஆண்டுக்கான பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது.

இதில் இந்தியா 102 இடத்தில் இருக்கிறது. தெற்கு ஆசிய நாடுகளில் 100 இடங்களுக்குக் கீழ் உள்ள ஒரே நாடு இந்தியாதான். பிரிக்ஸ் நாடுகளில் ஒன்றான இந்தியா அந்த அமைப்பைச் சேர்ந்த பிற நாடுகளைவிட மிக மிகப் பின்தங்கியிருக்கிறது. அந்த அமைப்பில் உள்ள நாடுகளில் தென் ஆப்பிரிக்கா பெற்ற 59வது இடம்தான், இந்தியாவுக்கு அடுத்த குறைவான இடம்.


 

உலகச்செய்திகள்