இந்தியாவில் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 2.25 % ஆக உள்ளது : மத்திய அரசு

44 Views
Editor: 0

இந்தியாவில் கொரோனா தொற்றால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 2.25 சதவிகிதமாக உள்ளது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது..

புதுடெல்லி,

இந்தியாவில் கோரதாண்டவம் ஆடிவரும் கொரோனா, கடந்த 24 மணி நேரத்தில் 47,704 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  கொரோனா பாதிப்பால் 654-பேர் கடந்த 24 மணி நேரத்தில் உயிரிழந்தனர்.

இதுவரை கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவர்கள் எண்ணிக்கை  14,83,157 - ஆக  உயர்ந்துள்ளது. அதேபோல், கொரோனா தொற்று பாதிப்பால்  33,425 பேர் இதுவரை இந்தியாவில் உயிரிழந்துள்ளனர்.


கொரோனா பாதிப்புடன்   4,96,988- பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து 9,52,744- பேர் குணம் அடைந்துள்ளனர்.  இந்தியாவில்  கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்பு விகிதம் 2.25 சதவிகிதமாக உள்ளது.

கொரோனா தொற்றில்  இருந்து குணம் அடைவோர் விகிதம் 64 சதவிகிதமாக உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 35,176 பேர் கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து குணம் அடைந்துள்ளனர். மேற்கண்ட தகவலை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 

உலகச்செய்திகள்