கொரோனாவின் முதல் அலையில் நான் உள்ளோம் வரும் காலத்தில் இதைவிட பெரிய அலைகள் வரலாம் என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.
கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் வாழும் பெரும்பாலான நாட்டு மக்கள் தங்களின் இயல்பு வாழ்க்கையை இழந்து தவித்து வருகின்றனர். சர்வதேச அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,69,02,832- ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 6,63,592 - ஆகவும் அதிகரித்துள்ளது. அதேபோல் வைரஸால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் எண்ணிக்கையும் 1,04,64,366 - ஆக அதிகரித்துள்ளது. அனைத்து நாடுகளும் கொரோனாவை கட்டுப்படுத்தும் தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் கொரோனாவின் முதல் அலையில்தான் தற்போது நாம் இருப்பதாக உலக சுகாதார நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் மார்க்ரெட் ஹாரிஸ் தெரிவித்துள்ளார். நேற்று ஜெனீவாவில் செய்தியாளர்களை சந்தித்த அவர், “கொரோனா வைரஸ் பருவகாலத்துக்கானது எனப் பலர் நினைக்கலாம் ஆனால், இது காய்ச்சல் போல இல்லாமல் அனைத்து வானிலைகளையும் விரும்புகிறது. இதற்கு முந்தைய காலங்களில் வெடித்த சுவாசம் தொடர்பான வைரஸ்கள் குறிப்பிட்ட பருவங்களில் மட்டுமே பரவின. இப்படியிருக்கையில் கொரோனா மிக வித்தியாசமாக நடந்துக்கொள்கிறது. இனிமேல்தான் நாம் மிகவும் விழிப்புடன் இருக்க வேண்டும். நாம் வைரஸைப் பற்றி கற்றுக்கொண்டிருந்தால் அது நம்மைப் பற்றி அறிந்துகொள்கிறது.