இந்த ஆண்டு ஐநா பொதுச் சபையில் நேரடியாகக் கலந்து கொள்ளும் ஒரே உலகத் தலைவர் இவர் தான்..? அமெரிக்கத் தூதர் அறிவிப்பு..!

51 Views
Editor: 0

செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியூயார்க்கிற்குச் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது..

செப்டம்பர் மாதம் நடைபெறும் ஐ.நா பொதுச் சபைக் கூட்டத்தில் கலந்துகொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நியூயார்க்கிற்குச் செல்ல வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால் இந்த ஆண்டு ஐநா பொது சபைக் கூட்டத்தின் மெய்நிகர் உயர் மட்ட வாரத்தில் நேரில் உரையாற்றும் ஒரே உலகத் தலைவர் அமெரிக்க அதிபர் தான் என்று ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் தெரிவித்தார்.

“ஜனாதிபதி டிரம்ப் பொதுச் சபைக் கூட்டத்தில் நேரில் பேசுவார் என்று நாங்கள் நம்புகிறோம். நேரில் பேசும் ஒரே உலகத் தலைவராக அவர் இருப்பார்.” என்று அமெரிக்க தூதர் கெல்லி கிராஃப்ட் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.

ஐ.நா.வின் 75 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக, வருடாந்திர பொதுச் சபை அமர்வு முழுமையாக வீடியோ கான்பெரன்ஸ் மூலம் நடைபெற உள்ளது. கொரோனா வைரஸ் தொற்றுநோயால் வருடாந்திர கூட்டத்தில் நாடுகளின் தலைவர்கள் நேரடியாகக் கலந்து கொள்ள மாட்டார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

உலகத் தலைவர்கள் உயர் மட்ட வாரத்திற்கு முன்பே பதிவுசெய்யப்பட்ட வீடியோ அறிக்கைகளை சமர்ப்பிப்பார்கள் என 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐநா பொதுச் சபை கடந்த வாரம் முடிவு செய்தது.

அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபையின் நிருவன நாடாகும். செப்டம்பர் 22 அன்று நடைபெறும் பொதுச்சபை கூட்டத்தின் 75’வது அமர்வின் பொது விவாதத்தில் உரையாற்ற டிரம்ப் நியூயார்க்கிற்கு செல்ல வாய்ப்பு உள்ளது.

அமெரிக்கா பாரம்பரியமாக பிரேசிலுக்குப் பிறகு விவாதத்தில் இரண்டாவது பேச்சாளராக உள்ளது. நவம்பர் மாதம் அமெரிக்காவில் தேர்தல் நடப்பதற்கு முன்னர் ட்ரம்ப் தனது ஜனாதிபதி பதவியின் முதல் பதவிக் காலத்தின் பொதுச் சபைக்கான இறுதி உரையாக இது இருக்கும். மேலும் டிரம்ப் தனது வெளியுறவுக் கொள்கை சாதனைகளை முன்னிலைப்படுத்த ஐ.நா. தளத்தை பயன்படுத்தலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

உலகச்செய்திகள்