பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதல்: உஷார் நிலையில் ஆப்கானிஸ்தான் ராணுவம்:
காந்தஹார்
ஆப்கானிஸ்தானின் காந்தஹார் மாகாணத்தின் ஸ்பின் போல்டாக் மாவட்டத்தில் வியாழக்கிழமை “குடியிருப்புப் பகுதிகள்” மீது பாகிஸ்தான் படைகள் நடத்திய பீரங்கித் தாக்குதல்களில் குறைந்தது 9 பொதுமக்கள் கொல்லப்பட்டனர் மற்றும் 50 பேர் காயமடைந்ததாக ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
"ஆப்கானிஸ்தான் இராணுவத் தளபதி ஜெனரல் யாசின் ஜியா, அடல் 205, செலாப் 201 மற்றும் தண்டர் 203 உள்ளிட்ட அனைத்து இராணுவப் படையினருக்கும் பாகிஸ்தான் படைகளுக்கு எதிராப நடவடிக்கைகளுக்குத் தயாராகுங்கள் என்றும், துரண்ட் கோட்டில் நிறுத்தப்பட்டுள்ள ஆப்கானிய படையை தயார்பபடுத்தவும் உத்தரவிட்டு உள்ளார்.
ஆப்கானிஸ்தான் விமானப்படை மற்றும் நாட்டின் சிறப்புப் படைகள் பாகிஸ்தான் படைகளுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு எச்சரிக்கையாக இருக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளன.
ஆப்கானிஸ்தானின் கிழக்கு மற்றும் தெற்குப் பகுதிகளில் பல ஆண்டுகளாக பாகிஸ்தான் இராணுவப் படைகள் பீரங்கித் தாக்குதல்கள் மற்றும் ஷெல் தாக்குதல்களை மேற்கொண்டு வருகின்றனஆனால் பாகிஸ்தானிய ராணுவம் தொடர்ந்து இந்த தாக்குதல்களை மறுத்து வருகிறது.