இளைஞர்களுக்கு உலக சுகாதார அமைப்பு சொன்ன கொரோனா மெசேஜ்…!

40 Views
Editor: 0

ஜெனீவா: இளைஞர்களையும் கொரோனா தாக்கலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது..

இளைஞர்களுக்கு உலக சுகாதார அமைப்பு சொன்ன கொரோனா மெசேஜ்…!

 

ஜெனீவா: இளைஞர்களையும் கொரோனா தாக்கலாம் என்பதால் எச்சரிக்கையாக இருக்குமாறு உலக சுகாதார அமைப்பு அறிவுறுத்தி உள்ளது.

7 மாதங்களை கடந்து இன்னமும் 200க்கும் மேலான நாடுகளில் கோலோச்சி வருகிறது கொரோனா வைரஸ். உலகம் முழுவதும் நாளுக்குநாள் பாதிப்புகள் அதிகரித்த வண்ணம் உள்ளன.

தொடக்கத்தில் முதியவர்கள், குழந்தைகள் உள்ளிட்டவர்களுக்கு கொரோனா தொற்று அதிகம் பரவியது. ஆனால், இப்போது இளைஞர்களுக்கும் அதிகம் பாதிப்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

இந்நிலையில் இது குறித்து உலக சுகாதார அமைப்பு சில விவரங்களை வெளியிட்டு உள்ளது. இதுகுறித்து அந்த அமைப்பின் டெட்ரோஸ்  கூறியதாவது:

உலக சுகாதார அமைப்பு பலமுறை இதுபற்றி கூறி இருக்கிறது. மறுபடியும்,மறுபடியும் நாங்கள் சொல்வது ஒன்றே ஒன்று தான். இளைஞர்கள் கொரோனாவை வெற்றி பெறுவர்கள் அல்ல.

இந்த வைரசானது அனைத்து வயதினரையும் தாக்கும். இளைஞர்களை தாக்காது என்று கூறுவது உண்மையல்ல. ஆகையால் முதியவர்கள், குழந்தைகளும் எப்படி எச்சரிக்கையுடன் இருக்கிறார்களோ அதே போன்று இளைஞர்களும் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.

 

உலகச்செய்திகள்