மீண்டும் மிரட்டும் கொரோனா: சீனாவில் மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு

45 Views
Editor: 0

சீனாவில் கடந்த 24 மணிநேரத்தில் 49 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது..

மீண்டும் மிரட்டும் கொரோனா: சீனாவில் மேலும் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு:

பெய்ஜிங்,

உலக நாடுகளை தற்போது கதி கலங்க வைத்து வரும் கொரோனா முதன் முதலில் சீனாவின் உகான் நகரில் தான் கண்டறியப்பட்டது.  கடந்த ஆண்டு டிசம்பரில் கொரோனா தொற்று கண்டறியப்பட்டதும் உஷாரான சீனா பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தது.

உகான் நகரம் அமைந்துள்ள ஹுபெய் நகரை முழுவதுமாக முடக்கியது. சீனா மேற்கொண்ட அதிரடி நடவடிக்கைகளால் அந்நாட்டில் கொரோனா தொற்று கட்டுப்படுத்தப்பட்டது. கடந்த ஏப்ரல் மாத இறுதியில், உகான் நகரில் சிகிச்சை பெற்று வந்த கடைசி கொரோனா நோயாளியும் குணம் அடைந்து விட்டதாக சீனா பெருமிதப்பட்டது.

ஆனாலும், சீனாவில் அவ்வப்போது கொரோனா தலைகாட்டி வருகிறது.  இந்த நிலையில் அங்கு கடந்த 24 மணிநேரத்தில் 49 பேருக்கு கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இன்றய நிலவரப்படி 14 பேருக்கு கொரோனா அறிகுறி கண்டறியப்பட்டுள்ளது. கொரோனா தொற்றிலிருந்து 14 பேர் குணமடைந்துள்ளனர்.

புதிதாக தொற்று கண்டறியப்பட்ட 49 நபர்களில் 33 பேர் உள்ளூர்வாசிகள் என்றும், 16 பேர் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில், வடக்கு சீனாவின் சின்ஜியாங் மாகாணத்தில் அதிகபட்சமாக கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதிகளில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சீனாவில் இதுவரை 54,385 நபர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 4,634 நபர்கள் கொரோனாவால் உயிரிழந்த நிலையில், 79,003 பேர் குணமடைந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

 

உலகச்செய்திகள்